மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
யாரோ எங்கிருந்தோ கொடுத்த உத்தரவின் பேரில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்பட்டுள்ளது இன்றைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் அவர்கள் நிரூபிக்கட்டும், இல்லையெனில், நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம்- சிவசேனா தரப்பில் கபில் சிபல் வாதம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் பலம் என்பதே இல்லாமல் எப்படி துணை முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்?-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி வாதம்.
ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உடனே உத்தரவிட வேண்டும்-தேசியவாத காங்-காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை.
யாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
பெரும்பான்மையை அவையில்தான் நீருபிக்க வேண்டும் ஆனால் ஆளுநரின் முடிவு சட்ட ஆய்வுக்கு உட்பட்டதல்ல.
நம்பிக்கை வாக்கெடுப்பை முன்கூட்டியே நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றால் ஆளுநரிடம் கேட்கலாம் ஞாயிறன்று நீதிமன்றத்தை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை-பாஜக தரப்பில் முகுல் ரோஹத்கி வாதம்.
No comments:
Post a Comment