அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.70 ஆகவும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.71.09 ஆகவும் உள்ளது.

*உ.பி.யில் பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு.

டெல்லி சாணக்யாபுரியில் உ.பி பவன் பகுதியில் 144 தடை உத்தரவு அமல். உ.பி. பவனை முற்றுகையிட்டு டெல்லி ஜாமியா மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டம் என தகவல்.

*கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.

சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு-தண்டனை விவரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு. கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்பு.

*கஜகஸ்தான் விமானம் விபத்து : 100 பேரின் நிலை என்ன?

100 பயணிகளுடன் சென்ற விமானம் கஜகஸ்தானின் அல்மட்டி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

*சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.29,680-க்கு விற்பனை.

*ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு.

அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் - திமுகவின் வழக்கை டிச.30ம் தேதி விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.

*ரஷ்யாவின் உதவியுடன், கூடங்குளம் அணுமின் உலை வளாகத்தில், அடுத்து 2 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. -தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அவ்தீவ் பேட்டி.

அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 12 மின்னுற்பத்தி திட்டங்களை அமைக்கவும் இலக்கு நிர்ணயம் - அவ்தீப் பேட்டி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages