அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*படப்பிடிப்பில் விபத்து - மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு:
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு!
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு. தலைமறைவாக உள்ள ராஜனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
*டெல்லி : தூக்கு தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.
பிப்ரவரி. 16ல் சிறையின் சுவரில் தலையை மோதி தனக்குத்தானே குற்றவாளி வினய் காயத்தை ஏற்படுத்தியுள்ளார் - திகார் சிறை நிர்வாகம் தகவல்.
*‘ரூ.32 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை’ சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.336 வரை உயர்ந்து புதிய உச்சத்தில் தொடர்ந்து விற்பனையாகிறது.
*8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவு. சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு.
எல்லா தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது கேலிக்கூத்தாக உள்ளது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
முறைகேடுகளால் மக்கள் தேர்வுகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் - நீதிபதி. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க டிஜிபி, சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு.
*உள்ளாட்சித் தேர்தல் - உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மனு. திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
*எஸ்.ஐ-க்கு தண்டனை நிறுத்தி வைப்பு:
சப்-இன்ஸ்பெக்டருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு.
விசாரணைக் கைதியை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கு. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு. ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
*அவிநாசி பேருந்து விபத்து - பிரதமர் மோடி இரங்கல்:
தமிழகம், திருப்பூர் மாவட்டத்தில் நேர்ந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது- பிரதமர் மோடி இரங்கல். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே கருதுகிறேன் - கமல். சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது - கமல். படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்.
*டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
*குடிமராமத்து திட்டத்தில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் தூர்வாரப்பட்டதில் முறைகேடு வழக்கு:
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் 12 வாரத்தில் முதல் கட்ட விசாரணை நடத்த தமிழக ஊழல் தடுப்பு இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
*சர்வதேச சந்தைகளின் விலை ஏற்றத்தால், கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது, வரும் மாதங்களில் விலை குறையும் - பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
*தூத்துக்குடியைச் சேர்ந்த உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
பெண்ணின் உடல்நிலை கருவை கலைக்கும் நிலையில் இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உத்தரவு.
*டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு - விரைவில் விசாரணை.
*நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பில் தகவல்.
*ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் திவ்யா காக்ரன்! ( 68 கிலோ பிரிவு).
*மதுரை மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை வழக்கில் 13 பேரின் விடுதலையை எதிர்த்து கொலை செய்யப்பட்டவர்களின் மனைவிமார்கள் தொடர்ந்த வழக்கு. இந்த விஷயம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
*அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு. முதற்கட்டமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், 2ம் கட்டமாக ரூ.8 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.
விபத்தில் உயிரிழந்த அரசு பேருந்து ஊழியர்கள் பைஜூ, கிரீஷ் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் - கேரள அமைச்சர்.
No comments:
Post a Comment