அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும்
5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என - அமைச்சர் செங்கோட்டையன் பதில்.
*டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த காவலர் பூபதி கைது.
*நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் - ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!
*சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டுள்ளது - நடிகர் ரஜினிகாந்த்.
என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு இன்னும் நோட்டீஸ் வரவில்லை- ரஜினிகாந்த் பேட்டி.
*ரஜினியின் ஆன்மீக அரசியல் முகமூடி அம்பலமாகிவிட்டது
ரஜினியை நடிகராக பார்த்த மக்கள், பாஜகவின் ஊதுகுழலாக பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
- காங் கே.எஸ்.அழகிரி
*"ரஜினியின் கருத்து, தான் பாஜகதான் என்பது போல் பகிரங்கமாக உள்ளது; குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நேரடியாக விவாதிக்க ரஜினிகாந்த் தயாரா?!" - ரஜினிக்கு கே.பாலகிருஷ்ணன் சவால்.
*அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சுதந்திரமாக செயல்படும் - பிரதமர் மோடி
*ரஜினிகாந்த் நல்ல நடிகர் முதலில் கட்சித்துவங்கி கொள்கைகளை சொல்லட்டும் - உதயநிதி ஸ்டாலின்
மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை தன்னார்வத்துடனே அவர்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்
ரஜினிகாந்த் தற்போது நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் புரியவில்லை
*குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாரதீய ஜனதா கட்சி மீது மம்தா பானர்ஜி ஆவேசமாக சாடினார்
*தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம்
*5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள், அரசுக்கு நன்றி - நடிகர் தனுஷ்
*பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - கர்நாடகா உயர் நீதிமன்றம்.
*நியூசிலாந்து அணி4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி.
*குரூப் 2 ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது.
காவலர்கள் சித்தாண்டி, பூபதியை தொடர்ந்து ராணிப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் கைது. சென்னை எழிலகத்தில் வணிகவரித்துறையில் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் கைது - சிபிசிஐடி.
No comments:
Post a Comment