பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல்:
*தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையில்; பாதுகாக்கப்பட்ட வோளாண் மண்டலம் மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
*சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
*காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்கள் பாதுகாப்புக்கென சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்:
*ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்கு தடை.
*சட்ட முன்வடிவு மூலம் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்கு தடை
*விதிக்கப்படுகிறது.
*ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கு தடை.
*விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கு தடை
*கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது.
*தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதன் கீழ் வருகிறது.
*காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கு தடை பொருந்தும்.
*அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த தடை பொருந்தும்.
*'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு' உருவாக்கப்படும். இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும்.
*அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
*ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும் - சட்ட முன்வடிவில் தகவல்.
*"இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது".
*இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் தண்டனை.
*துறைமுகம் , குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு பாதிக்கலாகாது.தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
No comments:
Post a Comment