அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும்.- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.

*திருப்பூரில், எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன நிலையில் வாடிக்கையாளர்கள் முற்றுகை:
வங்கி முன் வாடிக்கையாளர்கள் முற்றுகைப் போராட்டம் - போலீசார் அனுமதிக்கவில்லை. வாடிக்கையாளர்கள், போலீசார் இடையே வாக்குவாதம்.

*மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் என்னென்ன?:

*மார்ச் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*செங்கல்பட்டு : அச்சரப்பாக்கத்தில் மலைக்குன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரிய வழக்கு தமிழக அரசு, தொல்லியல் ஆய்வு துறை, தேவாலய நிர்வாகம் மார்ச் 27ம் தேதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு:

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சருடன் சந்திப்பு.

*இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து - லைகா நிறுவனத்துக்கு கமல் கடிதம்:

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரீன் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் கமலஹாசன் கடிதம். லைகா நிறுவனத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் கதாநாயகர் முதல் கடை நிலை ஊழியர் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - கமலஹாசன். விபத்து நேரிட்டால் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும் - கமல்.

*மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.

நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலை மொழி பெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்தார் ஜெயஸ்ரீ.

*தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம்.

*நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் வழக்கறிஞர்கள் ஆஜர்.

*பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 102 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல்கள் மார்ச் 4ம் தேதி நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம்.

*முதலமைச்சருக்கு பாராட்டு விழா:

மார்ச் 7ஆம் தேதி திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா.
விவசாயிகள் சங்கம் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு.

*காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர்.

*சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு.

சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி மார்ச் 31க்குள் தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

*இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக, அரங்கு அமைத்த மேலாளர் உட்பட 6 பேரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

*மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து.

*தமிழகத்தின் பழமைக்கு சான்றாக விளங்கும் ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கு தமிழ் வளர்ச்சி துறை செயலர், தேசிய தமிழ் கல்வி நிறுவன இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

*பீகார் சட்டசபையில் என்ஆர்சி திட்டதை அமல்படுத்தமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றம் என்பிஆர் திட்டத்தை 2010ம் ஆண்டு சரத்து படியே அமல்படுத்த வேண்டும் எனவும் சட்டசபையில் தீர்மானம்.

*சிறப்பு பொது விநியோகம் மூலம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

*சென்னை மாநகராட்சியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கோரப்பட்ட ஒப்பந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகார் குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்-லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு.

*டெல்லி : வடகிழக்கு மாவட்டங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான ஆலோசனை நிறைவு:

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.
டெல்லியில் அமைதியை திரும்பப்பெற அனைத்து கட்சிகளும் நடவடிக்கை எடுக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான ஆலோசனைக்குப்பின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.

*டில்லியில் மீண்டும் வன்முறை.

வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், ஐப்ராபாத், பஜன்புராவில் கல்வீச்சு தீவைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 3-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. நேற்ற நடந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 160 பேர் காயம் அடைந்துள்ளனர்.

*வடகிழக்கு டெல்லில் 144 தடை உத்தரவு:

வடகிழக்கு டெல்லில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டு பதற்றம் உருவானதால் டெல்லி காவல்துறை நடவடிக்கை.
மவுஜ்பூர், பிரம்மபுரி, கரவால் நகர், சந்த்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*2 செய்தியாளர்கள் மீது தாக்குதல்:

வடகிழக்கு டெல்லியில் வன்முறை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற  செய்தியாளர்கள் மீது தாக்குதல். தாக்குதலில் காயமடைந்த 2 செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*டெல்லி வடகிழக்கு மாவட்டங்களில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்டதும் சுட வேண்டும் என்ற தகவல் தவறானது - டெல்லி காவல்துறை.

*டெல்லியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் பத்திரிகையாளர்கள் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

*டெல்லி வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு. நகரின் 6 இடங்களில் ஊரடங்கு உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages