அக்னிப்புரட்சி (14.04.2020) இன்றைய காலை கொரோன சிறப்பு செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி (14.04.2020) இன்றைய காலை கொரோன சிறப்பு செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி (14.04.2020) இன்றைய காலை கொரோன சிறப்பு செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.19 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,19,599 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 19,23,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,44,017 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 51,740 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,621 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 586,866 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,516 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,465 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159,516 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 566 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,756 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170,099 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 547 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,967 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136,779 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 574 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,329 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,621 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 717 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,585 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,303 ஆக அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில் 3,194 பேரும், பெல்ஜியத்தில் 3,903 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நெதர்லாந்து 2,823 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 1,296 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,138 பேரும், பிரேசில் நாட்டில் 1,328 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

*இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ல் இருந்து 339ஆக உயர்வு.
கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 9,352ல் இருந்து 10,363ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 980ல் இருந்து 1036 ஆக உயர்வு-சுகாதார அமைச்சகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages