அக்னிப்புரட்சி (23.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619ஆக உயர்வு.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,341 பேர் உயிரிழப்பு.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,48,717.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,659.
*இந்தியாவில் இன்று 1229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,797 ஆக உயர்வு கொரோனாவால் 686 ஆக அதிகரிப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு.
*’மும்பையில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை தர அனுமதி. மும்பையில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை தர மகாராஷ்டிர அரசுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி.
*தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 90 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக அதிகரிப்பு.- தமிழக சுகாதாரத்துறை தகவல்.
*சென்னையில் 400 பேருக்கு கொரோனா. சென்னையில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக அதிகரிப்பு.
*'கோவையில் இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதி':
கோவை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்பட ஆட்சியர் ராஜாமணி அனுமதி அளித்துள்ளார்.
தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத இறைச்சிக் கடைகள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.
*வேலையிழந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுக வேலையிழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் மூலம் உதவிக்கரம் நீட்டக்கோரி பிரதமருக்கு வைகோ கடிதம்.
ஊரடங்கு காரணமாக சுமார் 90 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன - வைகோ.
*புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
*ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும். - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
*கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். சோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் -அனைத்து மாநிலங்களுக்கும் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்.
கொரோனா பரிசோதனை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டவட்டம். ரேபிட் சோதனையை நிறுத்தி வைக்க அறிவுறுத்திய நிலையில் விளக்கம்.
*ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் - காங்கிரஸ் இடை கால தலைவர் சோனியா காந்தி. கோரிக்கை
ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை.
சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம்.
முதல் கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன- சோனியா காந்தி.
ஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்தில் வெறுப்பு வைரஸை பரப்புகிறது பா.ஜ.க.-சோனியா காந்தி.
*அமெரிக்கா: நியூயார்க்கில் புகழ்பெற்ற BRONX உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.
ஒரு புலிக்கு கொரோனா உறுதியானதையடுத்து மேலும் 4 புலிகள், 3 சிங்கங்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.
*தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம்?
^சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் - தமிழக அரசு அரசாணை.
*கொரோனா பிரச்னை சரியாகும் வரை ஆயுதங்களை கொள்முதல் செய்ய வேண்டாம்-ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்குமாறு முப்படைகளுக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடிதம்.
*எந்த அளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஊரடங்கின் வெற்றி அமையும்’ -மன்மோகன் சிங்.
*கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு முக்கியமானது. - மன்மோகன் சிங்.
*வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு சீல். வாணியம்பாடி கிராமிய காவல் பெண் ஆய்வாளர் மங்கையர்கரசிக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் காவலர்கள் தனிமைப் படுத்த பட்டுள்ளனர்.
* ரூ.50 லட்சம் இழப்பீடு - மருத்துவர்கள் நன்றி’ கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் தரப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மருத்துவர்கள் நன்றி. இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா முதல்வர் பழனிசாமிக்கு காணொலியில் நன்றி தெரிவித்தார்.
*எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் - தமிழக அரசு பரிந்துரை. இது கொரோனாவுக்கான சிகிச்சை அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையே - தமிழக அரசு.
*மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது.
01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும்.
ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும்.
ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.
*சென்னையின் முக்கியமான சாலையான அண்ணாசாலை மூடப்பட்டது.
சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை 15 கி.மீ மூடப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு தடை.
சாலையில் நடமாடும் வாகன எண்ணிக்கை கட்டுபடுத்த நடவடிக்கை.
மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்
100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதியளித்தும் தமிழக அரசு உத்தரவு.
ஊரடங்கில் தளர்வுகள்: தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்- அரசாணை.
கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி.
நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி.
மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.
குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
மொபைல் ரீசார்ஜ் கடைகள் இயங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி:
மின்விசிறி ரிப்பேர் கடைகள் இயங்கவும் அனுமதி. மாணவர்களுக்கான புத்தக கடைகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் தொடர்ந்து இயக்கலாம்.
*மதுரை: மீனாட்சியம்மன் கோவிலில் பணிபுரியும் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி - கோவிலில் பணிபுரியும் கோவில் பணியாளர்கள் 80 பேருக்கு பரிசோதனை.
*"இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் நாட்டுக்காக விளையாடவில்லை சொந்த சாதனைகளுக்காகவே விளையாடினார்கள் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.
*ரேசன் கார்டு இல்லையென்றாலும் ரூ.500 மதிப்பிலான மளிகைப்பொருட்கள் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் - தமிழக அரசு.
ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் மளிகைப்பொருட்களை வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
*கடலூர்: 26 ஆம் தேதி முழு ஊரடங்கு.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தீவிர நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு. இதனை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை.
*மூன்றாம் கட்டத்திற்கு செல்கின்றதா தமிழகம்?
இன்று தொற்று கண்டறியப்பட்ட 54 பேரில் 17 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என தெளிவாக கூற முடியாத நிலை உள்ளது.
இவர்களில் 6 பேர் சென்னை, 4 பேர் சேலம், 2 பேர் மதுரை, செங்கல்பட்டு, தருமபுரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் விழுப்புரம் தலா ஒருவர்.
*குடிமராமத்து திட்டப்பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.
2020-21 ஆம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1,387 குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு.
சென்னை மண்டலத்தில் 377 பணிகளுக்கு ரூ.155 கோடி.
திருச்சி மண்டலத்தில் 458 பணிகளுக்கு ரூ.140 கோடி.
மதுரை மண்டலத்தில் ரூ. 156 கோடி மதிப்பில் 306 பணிகள்.
கோவை மண்டலத்தில் ரூ. 45 கோடி செலவில் 246 பணிகள்.
No comments:
Post a Comment