என்ன ஆனார் கிம்? வடகொரியா விரைந்த சீன டாக்டர் குழு: - Agnipuratchi

என்ன ஆனார் கிம்? வடகொரியா விரைந்த சீன டாக்டர் குழு:

Share This

என்ன ஆனார் கிம்? வடகொரியா விரைந்த சீன டாக்டர் குழு:

பீஜிங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்தவிட்டதாக ஹாங்காங் சேட்டிலைட் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்த அறிய, சீன டாக்டர் குழு வடகொரியா சென்றுள்ளது.

வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னுக்கு சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக, கிம்முக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு, கடந்த, 12ம் தேதி, ஹியாங்சன் கவுண்டி என்ற இடத்தில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிம் இறந்து விட்டதாக, ஹாங்காங் சேட்டிலைட் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கிம் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள, சீன டாக்டர்கள் குழு வடகொரியா சென்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages