நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.
ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தொடரும் கட்டுப்பாடுகள் என்னென்ன? தளர்வுகள் என்னென்ன?
முழுவிபரம்:
அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.
பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது
சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.
ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.
கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி. அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.
சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.
மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்:
நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீட்டித்தும், மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவாசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.
*முதல்கட்ட தளர்வுகள்:
ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.
*இரண்டாம் கட்ட தளர்வுகள்:
இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.
*மூன்றாம் கட்ட தளர்வுகள்:
மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வுகளும் கிடையாது. பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
No comments:
Post a Comment