புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முக்கியச் செய்தி - பா.ம.க. தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முக்கியச் செய்தி - பா.ம.க. தலைவர் ஜி. கே. மணி

Share This

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முக்கியச் செய்தி -  பா.ம.க. தலைவர் ஜி. கே. மணி                            
         
தங்களின் வாழ்வாதாரம் தேடி தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களுக்கும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் உலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரக்கூடியவர்கள் ஏராளமானோர். தற்போது கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வரும் நெருக்கடியானச் சூழலில் வேலைக்காக வெளியில் சென்றவர்களும் படிக்கச் சென்றவர்களும் கோவில்களுக்கு மற்றும் சுற்றுலாச் சென்றவர்களும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டிருப்பவர்கள் அதிகமானோர் மிகுந்த வேதனையிலும் மன உலச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.                    
         
இந்நிலையில் சொந்த ஊர் செல்ல விரும்பி துடித்துக்கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அடுத்துள்ள 4 மாநகராட்சிகளில் மட்டும் 21 இலட்சம் புலம் பெயர்ந்து சென்றவர்கள் என்றும் அவர்களில் 10 இலட்சம் பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் இதேபோல் ஐக்கிய அரபு நாடுகளின் அபுதாபி விமான நிலையத்திலிருந்து இந்தியா வர 32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோல் நிறைய இடங்களிலிருந்து செல்பேசி மூலம் தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது.இப்படி பொதுமக்கள் உள்ளூரில் வீட்டுக்குள்ளேயும் வெளியே சென்றவர்களின் நிலையும் ஒவ்வொரு நாளும் வேதனையோடே கழிந்து கொண்டிருக்கிறது.               
           
விடியும் நாள் எந்நாளோ?  விடியல் விரைவில் கிட்டும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நம்பிக்கையே வாழ்க்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages