அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் 35,00,633 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,45,048 லட்சமானது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,28,453 லட்சமாக உயர்ந்தது.

அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்ந்தது.

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 67,140  ஆக உள்ளது.
ஸ்பெயினில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.45 லட்சமானது.
இத்தாலியில் கொரோனாவால் 2.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 2487 பேர் பாதிப்பு இன்றுவரை
பாதிக்கப்பட்டோர் - 40,263. உயர்வு.

இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 பேர் இதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,306 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 10,018 லிருந்து 10,887 ஆக உயர்வு- மத்திய அரசு.

*தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

தமிழகத்தில் 3,000ஐ கடந்து கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்வு.

சென்னையில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் இன்று 38 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,379 பேர் குணமடைந்துள்ளனர் - தமிழக சுகாதாரத்துறை.

*ஜம்மு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் 5 பேர் வீர மரணம்.
1 காவலர், 4 ராணுவ வீரர் உள்பட 5 பேர் வீர மரணம். ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை.

*கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற மேலும் 8 பேருக்கு கொரோனா.

பண்ருட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடலூர் சென்ற 700 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமை படுத்தப்பட்டுள்ள 700 பேரில் 550 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

கடலூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு.

*விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு.

*சென்னை:கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியானதின் எதிரொலி:

தீவிரமாக கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல். கோயம்பேடு சந்தையில் இருந்து வருபவர்களை கண்டறியும் பணி தீவிரம்.

ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம். கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்படும்.

*கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, தென்காசி மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு.
மருந்தகங்கள், பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

*கொரோனாவுக்கு எதிராக போராடும் வீரர்களுக்கு முப்படைகள் சார்பில் இன்று ராயல் சல்யூட்.

ராணுவம், கடற்படை, விமான படைகளின் சார்பில் போர் விமானங்கள் இன்று பறக்கவிடப்படுகிறது-மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படுகின்றன.

*தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்:

நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது. - கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.

*சென்னை: கொரோனா முன்கள வீரர்களான மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் முப்படை மரியாதை.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மீது மலர்தூவி ராணுவம் மரியாதை.

கொரோனா முன்கள வீரர்களான மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்தூவி, பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டு முப்படை மரியாதை.

*கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.

கோயம்பேடு சந்தை மூலம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

*சென்னை மாநகராட்சியில் பாஸ் பெறுவது பற்றி இன்று விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.

சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாஸ் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

வெளிமாவட்டங்கள் செல்ல tnepass.tnega.org மூலம் பாஸ் பெறலாம்- மாநகராட்சி ஆணையர்.

வீட்டுவேலைப் பணியாளர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் பாஸ் வாங்கிக்கொடுக்கலாம்- மாநகராட்சி ஆணையர்.

தனிக்கடைகள் பட்டியலில் டீக்கடைகள், பேன்சிக் கடைகள் ஆகியவை இடம்பெறாது- மாநகராட்சி ஆணையர்.

*டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப்.  தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு.

சி.ஆர்.பி.எப். உயரதிகாரியுடன் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து நடவடிக்கை.
ஏற்கெனவே டெல்லி பட்டாலியனைச் சேர்ந்த 135 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

*என்னடா இது உளவுத்துறைக்கு வந்த சோதனை!

சென்னை, டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறையை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து உளவுப் பிரிவு கட்டுபாட்டு அறை மூடப்பட்டது!

*’தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்கிறது’ பெட்ரோல்-டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது.

*சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக்  உள்ளிட்ட பணியாளர்கள் அனுமதி பெற இணையதளம் அறிவிப்பு.

*https://t.co/HSbRQbDZ0R என்ற இணையதளத்தில் அனுமதி பெறலாம் - சென்னை மாநகராட்சி.

தொழிற்சாலைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.

*சென்னையில் இன்று ஒரே நாளில் 8
காவலர்களுக்கு கொரோனா தொற்று.

அயனாவரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர், ஐஸ் அவுஸ் தீயணைப்பு உதவி ஆய்வாளர் உள்பட 8 பேருக்கு பாதிப்பு. சென்னையில் காவல், ஆயுதப்படை, ஊர்காவல் படை, தீயணைப்பு துறையில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.

*புதுச்சேரி அமைச்சரவை முடிவு
நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலைகள், கடைகள் திறக்க அனுமதி.

நாளை முதல் எந்தவித முன் அனுமதியின்றி தொழிற்சாலைகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரைதான் கடைகள் திறந்து இருக்க வேண்டும்.

சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.

மதுக்கடை திறப்பது பற்றி அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

*ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலை களுக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும்.

200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும்.
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை வெளியிட்டது, தமிழக அரசு.

*தமிழகம், புதுச்சேரியில் இந்திய கடலோர காவல்படையினர் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கப்பல்களை ஒளிவிளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages