அக்னி நட்சத்திரம் இன்று துவங்கியது - Agnipuratchi

அக்னி நட்சத்திரம் இன்று துவங்கியது

Share This

அக்னி நட்சத்திரம் இன்று துவங்கியது

கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) துவங்குகிறது; வரும், 28 வரை தொடர்வதால், தமிழகம், புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும் அபாயம் உள்ளது. 'காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அக்னி நட்சத்திர காலத்தில், மற்ற நாட்களை விட, வெயில் அதிகரிக்கும்' என, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கூறப்படுகிறது. அதன்படியே, இந்த காலத்தில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. ஆனால், வானிலை ஆய்வு மையத்தின், அறிவியல் ரீதியான ஆராய்ச்சி கணிப்பில், கத்திரி வெயில் குறித்து, எந்த தனிப்பட்ட அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், பலத்த காற்று வீசும்.ஆனாலும், வறண்ட வானிலையே நிலவும். கடலோரம் அல்லாத, தமிழக உள் மாவட்டங்களில், சில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages