அக்னிப்புரட்சி இன்றைய (09.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,93,476 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,08,614 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 35,35,554 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,26,493 ஆக உயர்ந்துள்ளது.
*இந்தியாவில் கொரோனா தொற்று
பாதிப்பு எண்ணிக்கை 2,56,611லிருந்து 2,66,598 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் 1,24,095லிருந்து 1,29,215 ஆக உயர்வு.
உயிரிழப்பு எண்ணிக்கை 7,135 லிருந்து 7,466 ஆக உயர்வு.
கொரோனாவால் பாதித்த 1,29,917 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவுக்கு 331 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் 88,528 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 40,975 பேர் குணமடைந்துள்ள நிலையில்,
3,169 பேர் உயிரிழந்துள்ளனர்.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,243 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 24, 545 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 21 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 18, 325 பேர் குணமடைந்துள்ளனர்.
*10 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழக எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
10 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழக எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளன. மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
*10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் தமிழக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்? - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்.
தெலங்கானாவைப் போல தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் - தினகரன்.
*பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள், ஏனென்றால் மத்திய அரசு ஏழை, அதற்கு வரிப் பணம் வேண்டும் - ப.சிதம்பரம்.
பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள், ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள், அவர்களுக்குப் பணம் வேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள்தான் பணக்காரர்கள், ஆகவே அவர்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என்று அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்.
*வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை என்று வீடியோ வெளியிட்ட வரதராஜன் மீது வழக்கு.
*சென்னையில் கொரோனா தொற்று இல்லாத 84% தெருக்களில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.
திரு.வி.க. நகர் பகுதிகளில் கடந்த 14 நாட்களாக தொற்று இல்லாத பகுதிகளும் உள்ளது.
தொற்று உள்ள தெருக்களில் மேலும் பரவாமலும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை. - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.
*வரும் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு.
12ம் தேதி காலை 10 மணிக்கு முதலமைச்சர் நேரில் சென்று அணையை திறக்க உள்ளதாக தகவல்.
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
No comments:
Post a Comment