இந்திய அளவில் கல்வியில் 27% OBC இட ஒதுக்கீடு அன்றைய UPA-1 காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசிடம் போராடி பெற்றுத்தந்தது மருத்துவர் அய்யா. - Agnipuratchi

இந்திய அளவில் கல்வியில் 27% OBC இட ஒதுக்கீடு அன்றைய UPA-1 காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசிடம் போராடி பெற்றுத்தந்தது மருத்துவர் அய்யா.

Share This

இந்திய அளவில் கல்வியில் 27% OBC இட ஒதுக்கீடு அன்றைய UPA-1 காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசிடம்  போராடி பெற்றுத்தந்தது மருத்துவர் அய்யா.

2006ஆம் ஆண்டு சட்டவடிவம் பெற்று அதனை தொடர்ந்து இன்றுவரை இந்தியா முழுவதும் பல OBC மாணவர்கள் பயனடைந்தனர் என்பதே சமூகநீதி வரலாற்றுக்கு மருத்துவர் அய்யா ஆற்றிய பெரும்பங்காகும்.

இந்த 27% OBC இட ஒதுக்கீட்டுக்கு எந்த இடையூறு வந்தாலும் அதனை எதிர்த்து மருத்துவர் அய்யா எந்த எல்லைக்கும் சென்று போராடுவார் என்பதை தமிழகம் அறிந்தவிடயம். இதனை பல முறை அறிக்கையின் மூலம் மருத்துவர் அய்யா அவர்களே வாக்குறுதி கொடுத்துள்ளார்.

வரலாறு இப்படி இருக்க, பொத்தாம் பொதுவாக 27% OBC இட ஒதுக்கீட்டில் மத சிறுபான்மையினருக்கு 4.5% (sub categorise or sub quota) உள் இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டார்கள் என்று கதை கட்டுகிறார்கள். இந்த கதை எழுதும் நபர்களுக்கு யார் இப்படிபட்ட தவறான, உணமைக்கு மாறான தகவல்களை தருகிறார்கள்.

OBC இட ஒதுக்கீட்டை sub categorise செய்யலாமா? செய்தால் எப்படி செய்யலாம் என்று  அரசியல் அமைப்புச்சட்டம் சரத்து 340ன் கீழ் 2017 ஆம் ஆண்டு நீதிபதி ரோகினி அவர்களின் தலையில் அமைக்கப்பட்ட ஐவர் குழு  தற்போதுவரை  எந்தவொரு இறுதி பரிந்துரைகள் என எதுவும் சமர்பிக்கவில்லை.

இந்தியவில் நடந்த சமூக நீதி வரலாற்றை சமூக நீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவரும் “சுக்கா... மிளகா... சமூகநீதி? (ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)” என்ற தலைப்பில இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் புரியும்படி தொடர் கட்டுரைகளை எழுதிவருகிறார். இந்த கட்டுரைகளை நன்கு படித்தாலே புரியும் RSS, பாஜக போன்ற அமைப்புகள் எந்த காலத்திலும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை இனி இருக்கப்போவதும்மில்லை என்பது நன்கு விளங்கும். இந்த மாதிரி உண்மையான சமூகநீதி வரலாற்றை படித்து தெரிந்துகொள்ளாமல், இட ஒதுக்கீட்டின் பயனால் மருத்துவரான Kalaikovan Balasubramaniyan அவர் இஷ்டத்துக்கு சங்கிகளின் போலி சமூகநீதி கதைகளுக்கு காவடி தூக்கும்படி பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற எந்த ஒரு சமூகநீதி போராட்டத்திலும் பங்கு பெறாத RSS, பாஜக போன்ற சமூகநீதிக்கு எதிரான அமைப்புகளுக்கு  கலைக்கோவன் கம்பு சுத்துவது ஏன்?

1980களில் மருத்துவர் அய்யா தலைமைதாங்கி, பலரின் இன்னுயிர்களை தியாகம் செய்து, லட்சக்கணக்கான மக்கள் வழக்குகளையும், அவமானங்களையும், அதிகார அத்துமிறல்களையும், சிறைவாழ்க்கையும் சந்தித்து வரலாறு காணாத போராடங்களை நடத்தி 108 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து, 2004-2009 காலத்தில் மக்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு கொடுத்த அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மருத்துவர் அன்புமணி அண்ணன் மூலமாக தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்களுக்கு அகில இந்திய கோட்டா (மருத்துவ )படிப்பில்  22.5%  இட ஒதுக்கீடும், 2006ல் UPA-1 அரசாங்கத்திடம் போராடி மத்திய அரசாங்கத்தின் கல்வி நிறுவனங்களில் OBC மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது என மருத்துவர் அய்யா அவர்கள் இதுவரை மூன்று இட ஒதுக்கீடுகளை தமது போராட்ட அரசியல் வாழ்க்கையின் மூலமாக பெற்றுத்தர காரணமாக இருந்து சாதனை புரிந்துள்ளார். அதனால்தான் நாம் அவரை சமூகநீதிக்காவலர் என்று பெருமையோடும் நன்றியுணர்வோடும் அழைக்கிறோம்.

ஆதலால் மருத்துவர் அய்யாவுக்கு சமூக நீதி பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும் பாடம் எடுக்க இவ்வுலகில் எவனும் இன்னமும் பிறக்கவில்லை, பிற்கப்போவதும் இல்லை. 

எந்தவித அதாரமும் இல்லாமல், யாரோ, எழுதிக்கொடுத்ததை, உண்மைக்கு புறம்பானவற்றை, சமூக நீதி போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை, இட ஒதுக்கீடுக்கு எதிரான சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ள RSS மற்றும அதன் சார்பு அமைப்புகளுக்கு கொடிபிடிக்கும், அவர்களின் மூலம் சுய ஆதாயம் தேடிக்கொள்ளும் கலைக்கோவன் போன்றவர்களிடம்....
நாம் எப்படி வெறிப்பிடித்த நாய்களிடம் ஒதுங்கி இருப்போமோ அப்படி ஒதுங்கியிருப்பது நல்லது.......

பாட்டாளி சமூக ஊடகப்பேரவை ஏதோ இவர்களை கட்டம் கட்டுகிறது, அதன் தலைவர் அண்ணன் Arul Rathinam இப்படிப்பட்ட நபர்களை திட்டமிட்டு ஓரங்கட்டுகிறார் என்று கதறுவதெல்லாம் வெறும் போலி நாடகம்.

சமூகநீதிக்கும், இட ஒதுக்கீடுக்கும் எதிராக யார் இயங்கினாலும் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அல்ல ஒவ்வொரு பாட்டாளி தொண்டனும் கருத்தியல் ரீதியாக இப்படிப்பட்ட கயவர்களை இச்சமூகத்துக்கு இனம்காட்டுவார்கள்.

ந. வினோபா பூபதி (வழக்கறிஞர்)
செய்தித்தொடர்பாளர், பாமக
ஒருங்கிணைப்பாளர், பாட்டாளி சமூக ஊடகப்பேரவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages