அக்னிப்புரட்சி இன்றைய (08.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.07.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,48,244ஆக உயர்வு.

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 68,49,076ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,46,547ஆக உயர்வு.

அமெரிக்கா, பிரேசிலில் உச்சகட்ட மோசமான நிலையை எட்டும் கொரோனா.

அமெரிக்காவில் ஒரே நாளில்  55,251 பேருக்கு கொரோனா பாதிப்பு.

பிரேசிலில் ஒரே நாளில் 48,584 பேருக்கு கொரோனா உறுதி.

3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரே நாளில் 23,135 பேருக்கு கொரோனா.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - 7,42,417 ஆக உயர்வு:

இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்- 4,56,831.

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவோர்- 2,64,944.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு - 22,752.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,261 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 72,500 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 64 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 74,167 பேர் குணமடைந்துள்ளனர்.

*கொரனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சேலம் முதலிடம்: தமிழகத்தில் கொரனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகமுள்ள மாவட்டங்களில் சேலம் முதலிடம்

அதிகபட்சமாக சேலத்தில் 184 இடங்களும், சென்னையில் 158 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன - தமிழக அரசு

*ஜூலை 13-க்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள்:
ஜூலை 13ஆம் தேதிக்குப் பிறகு. அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்.

*மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னை தனியார் மருத்துவ மனையில் அமைச்சர் தங்கமணி அனுமதி.

தற்போது நடைபெறும் முதலமைச்சர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.

நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடல். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணிக்கு சிகிச்சை.

*புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1151 ஆக உயர்வு.
சிகிச்சை பெறுவோர் - 553, குணமடைந்தோர் - 584, உயிரிழப்பு - 14.

*அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

*புதுச்சேரி: கவர்னர் அலுவலகம் 48 மணி நேரத்துக்கு மேலாக மூடப்படுகிறது

கவர்னர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது.

கவர்னர் உட்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

அறிகுறி இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இதுவரை கவர்னர் நல்ல உடல் நலத்துடன் இருப்பராக கவர்னர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.416 உயர்ந்து ரூ.37,424க்கு விற்பனை.

*பல்லாவரம் 37-வது. தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர் கொரோனாவுக்கு உயிரிழப்பு_
தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து. சிகிச்சைக்காக குரோம்பேட்டைதனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போதுசிகிக்சை பலனின்றி இறந்துள்ளளார். எபினேசருக்கு வயது 38.

*கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*🪀மதுரையில் ஒரே நாளில் புதிதாக 351பேருக்கு கொரோனா பாதிப்பு
மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.

*கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி
கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூரைச் சேர்ந்த ரவி(68) அனந்தபத்மநாபன்(52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*லுஃப்தன்சா அதிரடி!!! சர்வதேச விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சரிவால் உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா தனது தலைமை நிர்வாக ஊழியர்களில் 20% பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

*ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

*திருப்பதி கோவிலில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி

திருமலையில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மகா துவாரத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பக்தர்கள் மற்றும்  ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இக்கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர், நாதஸ்வர வித்வான்கள்,  விஜிலென்ஸ் பாதுகாப்பு ஊழியர்கள், போலீசார்  என 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளுமாறும்,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமான உணவுகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

*மேற்கு வங்கம் - கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடும் கட்டுப்பாடுகள்

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மண்டலங்கள் ஆகியவற்றில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கு முடக்கப்படுவதாகவும், மாநில உள்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

*காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு மற்றும் மத்திய கிழக்கு, மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே வரும் 11ம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தமிழக சட்டப்பேரவையில் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

2017ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திமுகவின் சக்கரபாணி, தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் முடிவெடுக்குமாறு கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருந்தது.

இந்நிலையில், திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது .

*திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு - நடிகர் நடிகைகளின் 50% சம்பளம் குறைவு

சென்னையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தயாரிப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும் எனவும் இந்த இந்த முடிவு அடுத்த ஓராண்டு வரை இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர்.

இந்த முடிவு கொரோனா பிரச்சனை முடியும்வரை மட்டுமே இருக்கும் எனவும் முடிந்த பிறகு சம்பளம் வழக்கம்போல் வழங்கப்படும் எனவும் கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

*விடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு: அமைச்சர் பேட்டி

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்

என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வரும் 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages