பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 ஆவது பிறந்த நாள் இன்று ஜூலை 15- பாமக தலைவர் ஜி. கே. மணி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் திறந்த கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டில் பெரும் பாசன அணைகள் கட்டி, கால்வாய்கள் வெட்டி வேளாண்மையை மேம்படுத்தியவர். பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் பெருந்தொழிற்சாலைகள் உருவாக்கியவர்.
எல்லாத் தரப்பு மக்களாலும் அரசியல் கடந்து போற்றப்படுபவர். மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் பா.ம.க சார்பில் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விளக்கி பெரிய அளவிலான கண்காட்சி அமைக்கப்பட்டு,அவரோடு இருந்தவர்களை அழைத்து,காமராஜர் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை காமராஜர் அங்கில் நடத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் கல்வி நாளாக அறிவிக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் தொடர்ந்து வாதாடி பா.ம.க உள்ளிட்ட 42 சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று முதலமைச்சரிடம் கொடுத்தேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் வாதாடி காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக சட்டமன்றத்தில்அறிவிக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் பா.ம.கவின் பங்களிப்பு முக்கியமானது.
No comments:
Post a Comment