அக்னிப்புரட்சி இன்றைய (09.08.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 68,179 பேருக்கு செய்யப்பட்டுள்ளது - மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்: இன்று ஒரே நாளில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 989 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,09,117 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 119 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4,927 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,38,638 பேர் குணமடைந்துள்ளனர்.
* டெல்லியில் மேலும் 1,300 பேருக்கு கொரோனா’
டெல்லியில் ஒரே நாளில் புதிதாக 1300 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,45,427 ஆக அதிகரிப்பு; 4111 பேர் உயிரிழப்பு.
கொரோனாவிலிருந்து 1,30,587 பேர் குணமடைந்த நிலையில் 10,729 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
* தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு ஒரு லட்சம் கன அடியை தாண்டியது.
தருமபுரி: தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து வினாடிக்கு 1.07 லட்சம் கன அடியாக உயர்வு.
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* சேலம்: மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை இருமடங்காக அதிகரித்து 90,000 கன அடியாக உயர்வு:
அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 75.83 அடியாக அதிகரிப்பு; நீர் இருப்பு 37.92 டிஎம்சி.
* அங்கொட லொக்கா விஷம் கொடுத்து கொலையா?:
இலங்கை போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா விஷம் கொடுத்து கொலையா?
அங்கொட லொக்கா பிரேதப் பரிசோதனை சான்றிதழில் புதிய தகவல்கள்.
* ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் குஜராத்திற்கு மாற்றம்
ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் ஏற்கனவே குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 6 எம்எல்ஏக்கள் குஜராத் சென்றுள்ளனர்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபை கூட்டப்பட உள்ளது.
வரும் 14ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுப்பதற்காக பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, தங்களது கட்சி எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், பாஜக எம்எல்ஏக்களை குழப்பமடையச் செய்ய சமூக ஊடகங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி மூலம் வதந்திகள் பரப்பப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
* ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் எச்சரிக்கை.
நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் நோட்டீஸ் அளித்ததால் நடவடிக்கை.
* திருச்சி: மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா.
தொற்று பாதித்த அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி.
* மதுரை: சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது:
கொரோனா உறுதியான எம்எல்ஏ மாணிக்கம் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதி.
* கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு : பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து விநாடிக்கு 1.05 லட்சம் கனஅடியாக உயர்வு.
* தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது - அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவரும் இதனை மறுத்துள்ளார்.
கொரோனா மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்.
* கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன்; மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை செய்ய தயார் என உறுதியளித்தேன்.
- முதல்வர் பழனிசாமி.
”பள்ளிக் குழந்தைகள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி துணிகளால் ஆன சீருடைகளை உடுத்துவதன் மூலம் கைத்தறி நெசவு தொழிலை ஊக்குவிக்க முடியும்”.
- ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு.
* அடுத்த 24 மணிநேரத்தில் கோவை , நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும்: - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
* கேரளா: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்வு.
நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
* கடலூர்: கொரோனா தொற்றால் பெண் சர்வேயர் உயிரிழப்பு.
கொரோனா சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி என்ற 45 வயது சர்வேயர் பலி. உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் கொரோனா உறுதி.
* கொரோனாவிலிருந்து மீண்டார் அமித்ஷா:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவிலிருந்து குணமடைந்தார். கடைசியாக மேற்கொண்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தகவல்.
* கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை:
கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!
கேரளா கனமழை - சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என எச்சரிக்கை:
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு அலர்ட்- ஆலபுழா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் & காசர்கோடு.
ஆரஞ்சு அலர்ட் - கொல்லம், பதனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் & பாலக்காடு.
மஞ்சள் அலர்ட் - திருவனந்தபுரம்.
* கேரளா: மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு:
12 பேர் உயிருடன் மீட்பு - கனமழையிலும் தொடரும் மீட்பு பணிகள். மத்திய இணையமைச்சர் முரளீதரன் சம்பவ இடத்தில் ஆய்வு.
நிலச்சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் தமிழர்கள்.
* அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படும் பணி துவங்கியது
சென்னை: 'மணலியில் இருந்து ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படும் அம்மோனியம் நைட்ரேட்'
சென்னையில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தப்படும் பணி இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.
* தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 189.38 கோடிக்கு மது விற்பனை:
1. மதுரை-ரூ.44.55 கோடி,
2. திருச்சி-ரூ.41.67 கோடி,
3. சேலம்-ரூ.41.20 கோடி.
4. கோவை-ரூ.39.45 கோடி,
5. சென்னை-ரூ.22.56 கோடிக்கு மது விற்பனை.
* வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி:
காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
3 சதவீத வட்டியில் ரூ. 2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும்.
விவசாயப் பொருட்களை பாதுகாக்க, குளிர் சாதன கிடங்குகள் அமைக்க கடன்.
12 பொதுத்துறை வங்கிகள், 11 வேளாண் வங்கிகளுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்:
நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி, 3 ஆண்டுகளில் ரூ. 30 ஆயிரம் கோடி வீதம் கடன்.
ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தால் ஆன்லைன் வழியாகவே கடன் ஒப்புதல்.
* என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?'
நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?
தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர். - உதயநிதி ஸ்டாலின்.
* இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச:
அதிபரும் சகோதரருமான கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச.
* 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை:
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை.
சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து முடிவு.
முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி.
துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
* விஜயவாடா தீ விபத்து - பிரதமர் மோடி வேதனை:
விஜயவாடா கோவிட் சிகிச்சை மைய தீ விபத்து அறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பற்றியே என் எண்ணங்கள் உள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேசி அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதி அளித்தேன்.
பிழைப்புக்காக கேரள தேயிலைத் தோட்டத்திற்கு தென் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் நிலச்சரிவில் குடும்பத்தோடு பலியாகியுள்ளனர். 3 நாட்களாக மீட்புப் பணி தொடர்கிறது. இதுவரை 28 உடல்கள் கண்டுபிடிப்பு. இன்னும் 35 பேரைத் தேடிவருவதாக தகவல்
* நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பையில் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்களாக பெய்த கனமழையால் நகர மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். அதையடுத்து வியாழக்கிழமை முதல் மழை குறைந்துள்ளது.
இந்த நிலையில் மும்பையில் நாளை முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் ஹோசிலிகர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை நாளை (திங்கட்கிழமை) அல்லது நாளை மறுநாள் முதல் மீண்டும் தீவிரமடைய உள்ளது. இதனால் மும்பை உள்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை ஒரு வார காலத்துக்கு நீடிக்கலாம்” என்றார்.
ஆண்டுதோறும் மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் 58.52 செ.மீ. மழை தான் பெய்வது வழக்கம். ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் அதைவிட அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது. அதாவது கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மும்பையில் 59.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 150 பேர் பலியாகினர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த வெடி விபத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதேபோல், லெபனானுக்கு பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும் சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் இதனை வலியுறுத்தியது.
இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்தார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் அமைச்சகம் இது தொடர்பான விசாரணையை ஏற்கனவே அறிவித்துவிட்டது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை என கூறினார்.
* ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் உயிரிழப்பு
* ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி:
கேரள மாநில ராஜமலை எஸ்டேட் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்.
* கனிமொழி புகார் - விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு’
கனிமொழியிடம் இந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக கேட்பதுமில்லை.
- சிஐஎஸ்எஃப்.
விமான நிலையத்தில் மொழி தொடர்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரியால் எழுந்த விவகாரம்.
* ஜம்மு - காஷ்மீர் : பூஞ்ச் மாவட்ட எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி. இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை.
* மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியில் இருந்து 1.30 லட்சம் கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 81 அடியாக அதிகரிப்பு; நீர் இருப்பு 43.06 டிஎம்சி
No comments:
Post a Comment