அக்னிப்புரட்சி இன்றைய (30.08.2020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனா தொற்று:
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.51 கோடியாக அதிகரிப்பு.
தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.74 கோடியாக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.45 லட்சமாக அதிகரிப்பு.
* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று:
மொத்த பாதிப்பு 35.42 லட்சமாக உயர்வு.
இந்தியாவில் ஒரேநாளில் 948 பேர் கொரோனாவால் உயிரிழப்பு -பலி எண்ணிக்கை 63,498ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.65 லட்சமாக உயர்வு.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 64,935 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ். இதுவரை 27.1 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,22,085 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,249 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,34,436 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 94 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,231 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,406 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,62,133 பேர் குணமடைந்துள்ளனர்.
* தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன.
* சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 85.00 ரூபாய்க்கும், விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78.86 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
* மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் பல ஊரடங்குத் தளர்வுகளை இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது.
* வசந்தகுமார் எம்பி உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள். பொதுமக்கள், உறவினர்கள், பல்வேறு கட்சியினர் அஞ்சலி.
வசந்தகுமார் எம்.பி. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு. கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
* ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல்:
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,99,837 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு.
இதுவரை 6,94,928 வாகனங்கள் பறிமுதல்; 9,02,249 வழக்குகள் பதிவாகின. - தமிழக காவல்துறை
* மலையாள மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓணம் வாழ்த்து:
ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் - தமிழக ஆளுநர் வாழ்த்து.
* தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு - நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை:
சென்னை மண்டலம் - ரூ.52.50 கோடி, திருச்சி - ரூ.48.26 கோடி, மதுரை - ரூ.49.75 கோடி, சேலம் - ரூ.47.38 கோடி, கோவை - ரூ.45.23 கோடிக்கு மது விற்பனை.
* ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.
மக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்வும், அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வாழ்த்துக்கள் - ஸ்டாலின்.
* கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் - ஸ்டாலின். மத்திய அரசுக்கு உபரித் தொகையிலிருந்து ரூ.57,128 கோடி வழங்க ஒப்புதல் அளித்திருக்கும் ரிசர்வ் வங்கி.
* ஏழை - எளிய மக்களுக்கு உதவிசெய்வது, மிகப்பெரிய சவால் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும் - ஸ்டாலின்.
* மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தருமபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.
உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் - வானிலை மையம்.
* திருப்பூர் : அம்மாபாளையம் அருகே பாறைக்குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சரவணகுமார்(10), ரோஷினி(8) ஆகியோர் உயிரிழப்பு.
* பாபநாசம் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து செப்டம்பர் 16 முதல் நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி ஆணை.
* புதுச்சேரியில் 32 பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என்ற உத்தரவு மாற்றம்: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களை தவிர மற்ற பகுதிகளை தனிமைப்படுத்த கூடாது - முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு.
* திருப்பூர்: பணியின் போது லாரி மோதியதில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு நிவாரணம்:
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படைக் காவலர் பிரபு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி.
காங்கேயம் -சென்னிமலை நெடுஞ்சாலையில் நிறுத்தாமல் சென்ற லாரியை, துரத்தி சென்றபோது காவலர் உயிரிழப்பு. இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மறிக்க முயன்ற போது, லாரி மோதியதில் பிரபு உயிரிழப்பு.
* தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து.
வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்- தமிழக அரசு.
தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து என அறிவிப்பு.
அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி.
பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.
ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி; விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது- தமிழக அரசு.
அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்கும். வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்.
தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்.
கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு.
தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும். மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி.
* கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8,852 பேருக்கு கொரோனா’
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8,852 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் 106 பேர் உயிரிழப்பு.
- மாநில சுகாதாரத்துறை.
No comments:
Post a Comment