அன்லாக் 4 - மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றுமா தமிழகம்? - Agnipuratchi

அன்லாக் 4 - மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றுமா தமிழகம்?

Share This

அன்லாக் 4 - மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றுமா தமிழகம்?

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு அன்லாக் 4க்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது.

இபாஸ் முறை கூடாது என்றும் மாநில அரசுகள் தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்கக்கூடாது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டங்களுக்கு இடையே தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடங்க பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி இழப்பை ஈடுசெய்யவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages