தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு - Agnipuratchi

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

Share This

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

* தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து.

* வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.

* தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.

* சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

* தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து என அறிவிப்பு.

* அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி.

* பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

* ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்.

* பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி; விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

* வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்.

* தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்.

* கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு.

* தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும். மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages