சிலப்பதிகாரம் அறிவோம் - மருத்துவர் இராமதாசு அய்யா
3. கானல்வரி
இது கடற்கரைச் சோலையில் மாதவி - கோவலன் ஆகியோர்
யாழ் மீட்டி இனிய இசைப் பாடல்களைப் பாடிய சிறப்பினை
உரைப்பது தான் இந்த பகுதியாகும்.
விளக்கக்குறிப்பு:
வசந்த மாலை என்னும் தோழியிடமிருந்த யாழை வாங்கிய
மாதவி, பண்ணல் முதலிய எட்டு வகையாலும் இசை எழுப்பி
விளங்க அதனைக் கேட்டு மகிழ்ந்த கோவலன், ஆற்றுவரியும்
கானல்வரியுமாகிய பாடல்களை யாழிசையுடன் இயையப்
பாடினான். இப்பாடல்கள் அகத்துறையின் குறிப்புச் சார்ந்து தான்
வேறு ஒரு பெண்ணின்பால் நாட்டம் உடையவனாகக் காட்டுதல்
போல அமைந்திருந்தன. இவன் மயங்கிய தன்மையினைக் கண்டு
மாதவி கோவலன் கையிலிருந்த யாழை வாங்கித் தானும் வேறு
ஒரு குறிப்பினை உடையவள் எனத் தோன்றுமாறு பாடினாள்.
இதனால் கோவலன் மனத்தில் துயர் கொண்டவனாய்த் தன்னுடைய
ஏவலர்கள் பின்தொடரத் தனது மனையை அடைந்தான். மாதவி
தனியே தனது மாளிகையை அடைந்தாள். இதுவே கோவலன்
மாதவியைப்பிரிவதற்குக்காரணமாகி வினை விளைகாலமாக
மாறியது. இப்பாடல்கள் ஆழ்ந்த கவிநயமும் கருத்து வளமும்
உடையதாக விளங்குதலைக் காணலாம்.
மாதவி எட்டுவகையான இசைக்கூறுகளையும்
யாழில்கொண்டு இசைத்தல்
கட்டுரை
சித்திரப்படத்துள் புக்குச்செழுங்கோட்டின் மலர் புனைந்து
மைத்திடம் கண்மண மகளிர்கோலம் போல்வனப் பெய்தி
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்எ ன்று
இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப்
பண்ணல்பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டு கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகை யால் இசை எழி இப்
பண்வகையால் பரிவு தீர்ந்து,
மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளை போலப்பல் நரம்பின்மிசைப் படர,
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர் உடைப் பட்டடை என இசையோர் வகுத்த :
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்ட வகை தன்செவியின் ஓரத்து,
“ஏவ லன் பின்பாணி யாதெனக்”
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும்,
மாதவிதன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும் மன்.
தெளிவுரை:
சித்திர வேலைப்பாடு அமைந்த ஆடையும், வளப்பம்மிக்க
மலர்மாலையும் தரித்து மை தீட்டப்பட்ட கண்ணோடு விளங்கும்
மணப்பெண்ணைப் போன்று அழகு ஒளிர பத்தர், ஆணி, கோடு
நரம்பு எனப்படும் உறுப்புகளுடன் விளங்கிய யாழை மாதவி
கையில் ஏந்தினாள். அவல்பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல்,
தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்று!
விளங்கும்எட்டுவகையான கலை நுட்பம்கொண்டு யாழினை:
மீட்டி இசை எழுப்பினாள். மரகதக்கல்லினால் இழைக்கப்பட்ட '
மோதிரங்கள் காந்தள்மலர் போன்ற மாதவியின் கையில் அலங்கரிக்க அவை, யாழின்நரம்புகளின்மீது படிந்து இனிய இசையை
எழுப்பின. வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல்,
தெருட்டல், அள்ளல், பட்டடை என்கிற எட்டு வகையான இசைக்
கூறுகளையும் இசை வல்லார் வகுத்த வழியில் செவிக்கு இன்பம்
விளங்க வாசித்தனள். பின்பு கோவலன் மேற்கொண்டு தன்இசை
நுட்பத்தைக்காட்டுதற்கு உரியவாறு, அந்த யாழை அவனிடம்
கொடுத்தாள். யாழைப்பெற்ற கோவலனும் காவிரியாற்றின்சிறப்பினையும், கடற்சோலையின் அழகையும் பாராட்டிப்பாடும் நோக்கத்தில்மாதவியின்மனம்மகிழுமாறு வாசிக்கத்தொடங்கினான்.
சிறப்புரை:
இங்கு மாதவி யாழிசையினை எழுப்பிய நிலையில்கோவலன்
வரிப்பாடல்களை யாழின்சுருதியோடு பாடத் தொடங்கினான்
என்பதாம். யாழுக்குப் பூந்துகில் ஆடை சாத்தி மலர் புனைந்தமை
கொண்டு மணமகளுக்கு உவமை சாற்றப்பட்டது. இத்தன்மையில்
அந்த யாழ்அன்புக்கும், பாராட்டுதலுக்கும்௮மைந்தமை கூறப்
படுவதாயிற்று.
No comments:
Post a Comment