ரஷ்ய தடுப்பூசி ஆபத்தானது? ரஷ்ய அரசின் முன்னாள் நோய் நிபுணர் எச்சரிக்கை - Agnipuratchi

ரஷ்ய தடுப்பூசி ஆபத்தானது? ரஷ்ய அரசின் முன்னாள் நோய் நிபுணர் எச்சரிக்கை

Share This

ரஷ்ய தடுப்பூசி ஆபத்தானது? ரஷ்ய அரசின் முன்னாள் நோய் நிபுணர் எச்சரிக்கை

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை நாளை மறுநாள் பதிவு செய்ய உள்ளதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், ஏற்கனவே கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடீஸ் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை போட்டால் விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என ரஷ்ய அரசின் முன்னாள் தொற்று நோய் பிரிவு தலைவரான அலக்சாண்டர் செபுர்யோவ் கூறி உள்ளார்.   

இந்த தடுப்பூசியின் கிளினிகல் முடிவுகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவராததையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தடுப்பூசியால் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்து விடும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஆனால், செயல்திறன் இல்லாத கொரோனா வைரசின் அம்சங்கள் தடுப்பூசியில் உள்ளதாகவும், அவை தாமாக பல்கி பெருகும் திறன் அற்றவை என்பதால், தடுப்பூசியால் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் ரஷ்ய அரசின் காமாலெயா நிறுவனம் கூறி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages