பாசமிகு பாட்டாளி சொந்தங்களுக்கு,
சுக்கா.. மிளகா.. சமூகநீதி ? தொடரின் இருபத்தைந்தாம் தேர்வில் (இத்தொடரின் இறுதி தேர்வும் கூட) பங்குகொண்ட அனைத்து பாட்டாளி சொந்தங்களுக்கும் நன்றிகள்.
இருபத்து ஐந்தாம் தேர்வின் முடிவுகளை காண கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
http://pmkresults.in/
உங்கள் ஆர்வமும், அறிவும் வியக்க வைக்கின்றன.
நீங்கள் வாங்கிய மதிப்பெண் குறைவோ அதிகமோ என தயக்கம் கொள்ளாது உங்களின் மதிப்பெண்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு சமூக நீதியின் முக்கியத்துவத்தை பலருக்கு அறிய செய்யும் அரும்பணியை செய்திட வேண்டும் என்று பாட்டாளிகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர்சங்கம் முதலிய அமைப்புகளின் மூலம் 2020 செப்டம்பர் 13 முதல் 19 வரை 'சமூகநீதி வாரம் 2020' கொண்டாடப்பட இருக்கிறது.
2020 செப்டம்பர் 13 - 19 (ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை) சமூகநீதி வாரத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில் மாலை 6.00 மணி முதல் 7.30 வரை இணையவழி கருத்தரங்கம் நடைபெறும். இக்கருத்தரங்குகளில் சமூகநீதி தொடர்பான நிபுணர்கள், தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் உரையாற்றுவார்கள்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள்
www.pmkofficial.com/SJW2020Register
என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சிகளை
www.pmkofficial.com/SJW2020Zoom
என்ற இணைப்பை நேரடியாக சொடுக்கியோ,
Zoom செயலியில்
ID: 812 6392 1196
Password: 12345 உள்ளீடு செய்தோ காணலாம்.
www.pmkofficial.com/SJW2020Live
என்ற இணைப்பில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண முடியும். அனைவரும் சமூகநீதி வார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமூகநீதி குறித்து விழிப்புணர்வடையும்படி அன்புடன் அழைக்கின்றேன்
வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
மருத்துவர் ச. ராமதாஸ்
18.09.2020
No comments:
Post a Comment