அக்னிப்புரட்சி இன்றைய (08.10.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,63,76,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 27,393,733 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,059,915 பேராக அதிகரிப்பு.
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு 79,22,732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் புதிதாக 5,088 பேருக்கு கொரோனா. மொத்த பாதிப்பு 6,40,943 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழப்பு. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,052.
சென்னையில் மேலும் 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,793பேருக்கு தொற்று.
தமிழகத்தில் இன்று 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். - தமிழக சுகாதாரத்துறை தகவல்.
* அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம்.
மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதம் செய்கின்றனர்.
சால்ட் லேக்கில் உள்ள உட்டா பல்கலைக் கழகத்தில் விவாதம் நடைபெற்றுவருகின்றது.
* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* புதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்- புதுச்சேரி அரசு.
10,12ம் வகுப்புகளுக்கு 3 நாள்களும், 9,11ம் வகுப்புக்கு 3 நாள்களும் என வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் இயங்கும்.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது- புதுச்சேரி அரசு.
* கட்டுமான பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்படாது என்ற ஆணையை நீக்கியது ஏன்?
மின்இணைப்பு தொடர்பான ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டியதன் அவசியம் என்ன?
விதியை நீக்கினால் அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை?- கனிமொழி எம்.பி. கேள்வி.
* கொரோனா தொற்றால் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உயிரிழந்தார்.
* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு:
ஒரு கிராம் தங்கம் ரூ.4,800ஆக உள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.38,400-க்கு விற்பனை.
* சென்னையில் ரூ.10 லட்சம் கேட்டு நண்பர் மூலம் தந்தைக்கு ஃபோனில் மிரட்டல் விடுத்து சிறுவன் நாடகமாடியது அம்பலம்:
தந்தை புகாரையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சிறுவன் கடத்தல் நாடகமாடியதை கண்டுபிடித்தனர்.
* புதுக்கோட்டை: திருமயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு:
திருமயம் காவல் எல்லை பகுதியில் கஞ்சாபதுக்கியதை சரிவர கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால் நடவடிக்கை.
* மத்திய தொல்லியில் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு எனப் புகார்- உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.
அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு.
* அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது, நீதிமன்றம்.
கடத்தி செல்லப்பட்ட தனது மகளை மீட்க கோரி சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி சுவாமிநாதன் தரப்பில் நீதிபதி சுந்தரேஷ் அமர்வில் முறையீடு.
* ஆக்கிரமிப்புக்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்புள்ளது?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.
கொடைக்கானலில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு.
நாமக்கல்: மல்லாசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் வழங்குவதாக ரூ.2.40 கோடி மோசடி செய்த கூட்டுறவு வங்கி செயலாளர் ரவி, பணியாளர்கள் தங்கராஜ், தங்கவேல், கவுதம் உள்ளிட்ட 6 பேர் கைது - 7 பேர் தலைமறைவு.
* தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு:
- சென்னை வானிலை ஆய்வு மையம்.
சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகி தாழ்வு மண்டலமாக நாளைமறுநாள் வலுப்பெறும். - சென்னை வானிலை ஆய்வு மையம்.
* கல்லூரி பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி வழக்கு:
உயர்கல்வித்துறை செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம். கர்நாடகாவில் உள்ள தமிழ் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை.
* கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி"
தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் கடைசி மகனான திரு. ஜெயவீரன் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனைக் குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலூரில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்திய தியாகி அஞ்சலை அம்மாள், மகாத்மா காந்தி அவர்களால் "தென்னாட்டு ஜான்சி ராணி" என்று அழைக்கப்பட்டவர். அந்தப் போராட்டத்தில் கைதாகி, அஞ்சலை அம்மாள் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் பிறந்தவர் ஜெயவீரன். சுதந்திர தாகம் நிறைந்த குடும்பத்திலிருந்து பிறந்த அவரது மறைவால் வாடும் குடும்பத்திற்கும், தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
* சட்டவிரோதக் காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை?
காவல் மரணத்தில் இளைஞர் ரமேஷ் உயிரிழந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
தடய அறிவியல் அல்லாமல் சாதாரண மருத்துவர்களை கொண்டு உடற்கூராய்வு செய்தது ஏன் ?
அருகில் உள்ள தேனி மருத்துவக் கல்லூரி அல்லது மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லாமல் உசிலம்பட்டி மருத்துவமனையிலேயே உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்?
நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மறு உடற்கூறு ஆய்வு செய்யவும், அதனை முழு வீடியோ பதிவு செய்யவும் உத்தரவு.
* மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியுள்ளதா?- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை.
உள்நாட்டு ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்.
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அரசு உதவி வழங்க கோரி சென்னையை சேர்ந்த வின்கெம் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
* இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு:
2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்படும் என நோபல் பரிசு குழு அறிவிப்பு.
* கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 7.10.2020 அன்று வரை மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளது - தமிழக அரசு.
நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள்,பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - முதலமைச்சர்.
* அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைப்பு: - தமிழக அரசு அறிவிப்பு.
மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவதால் நேர்காணல் பணிகளில் ஏராளமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதால் நடவடிக்கை.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நிறுத்திவைப்பதாக அரசு அறிவிப்பு.
* ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி :
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு.
கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரணை செய்ய கோரிய வழக்கு:
வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக 3 மாவட்டங்களில் அக். 13, 14ம் தேதிகளில் முதல்வர் ஆய்வு:
13ம் தேதி தூத்துக்குடி , 14ம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்கிறார்.
* மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.
ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில் தகவல்.
அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழப்பு.
No comments:
Post a Comment