அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2020) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2020) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2020) முக்கிய செய்திகள்

* தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - முதலமைச்சர் பழனிசாமி.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,077    பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,00,193 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 833 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,93,299 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 45 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,825 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,314 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,55,170 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் 21 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு.

பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்து பரிசோதனையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு.

அதேவேளையில் அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

* புதுக்கோட்டை: விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை  முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் (அக்.23) பதிவு செய்யலாம். - வேலைவாய்ப்புத்துறை.

* பீகார் தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு:

மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.

பாட்னாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் தகவல்.

* கல்லூரி படிப்பிற்கு நுழைவுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது -தமிழக அரசு திட்டவட்டம்.

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது தமிழக உயர்கல்வித்துறை.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது தமிழக அரசு.

உயர்கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கவும் தமிழக அரசு எதிர்ப்பு.

* புதுக்கோட்டை; விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை  முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

* விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

* ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி:

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு.

* தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் கோரிக்கைகளை கண்டுகொள்வ தில்லை தமிழக அரசை விமர்சித்து பாமக நிறுவனர் இராமதாசு அய்யா ட்விட் -அரசியலில் பரபரப்பு.
அதிமுக -பாமக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதை உணர்த்தும் விதமான நிகழ்வு.

* தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை
நடைபெறுகிறது?"-உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.

அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவு. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக டெண்டர் விடும் பணி நடைபெற்றது.

9 பணிகளுக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில் 4 பணிகளுக்கு பணி ஆணை பெறாமல் வேலை நடக்கிறது.

தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை  நிறுத்தும்படி உத்தரவிடக் கோர முடியாது -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* கல்லூரிகள் தாமாக முன் வந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் சமர்ப்பிக்க எந்த தடையும் இல்லை - உயர் நீதிமன்றம்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கூடுதலாக ஒதுக்கும்படி கல்லூரிகளை நிர்பந்திக்கவில்லை - தமிழக அரசு.

அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதல் இடங்களை ஒப்படைக்க நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்து வைப்பு.

* நீட் ரத்து செய்யப்பட வேண்டும்
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டுமானால் நீட் கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.

“நீட்” தேர்வு முறையை நியாயப்படுத்தும் போலியான நோக்கில், ‘தமிழகம் சாதிக்கிறது’  எனப் பூரிப்படைந்தோர் தெளிவு பெறவேண்டும்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது - ஸ்டாலின்.

* நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2081.68 கோடி போனஸ்:

78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என அறிவிப்பு.
அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.17,951 வரை போனஸ் கிடைக்கும்.

* திருச்சியில் மூன்று நாட்கள் தொடர் கடையடைப்பு:

திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்கக்கோரி வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம் - திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் அறிவிப்பு.

* தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - குடியரசுத்தலைவருக்கு திருமாவளவன் எம்.பி. கடிதம்.

* அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை - ஆளுநர்

மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து ஆளுநர் தகவல் 7.5 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம்.

அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை - ஆளுநர்

மசோதா குறித்து முடிவு எடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகுமென ஆளுநர் தகவல்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தகவல்
மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம்.

5 அமைச்சர்கள் சந்திப்பின் போதும் இதே தகவலை தெரிவித்ததாக ஆளுநர் கடிதம்.

* மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு:
பண்டிகை விடுமுறையையொட்டி வெள்ளி மற்றும் சனிக் கிழமையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு.

நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages