அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,14,235 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 695 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,97,077 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 27 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,983 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,029 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,75,518 பேர் குணமடைந்துள்ளனர்.
* எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ- மாணவிகள் வரும் 2-ஆம் தேதி வரை இணையம் மூலம் பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.
தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த விவரங்கள் வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் கலந்தாய்வு மூலம் நடத்தி வருகிறது.
* சென்னையில் 26 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு.
6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழப்பு.
* சிதம்பரம் ஆர்ப்பாட்டத்திற்கு பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது:
சென்னையில் இருந்து காரில் இ.சி.ஆர் வழியாக சென்ற போது தடையை மீறி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற நடிகர் குஷ்பு முட்டுக்காடு அருகே கைது
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சிதம்பரத்தில் நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை இ.சி.ஆர் முட்டுக்காட்டில் போலீசார் கைது செய்தனர்.
* கடைசி மூச்சு இருக்கும்வரை பெண்களின் மாண்புக்காக போராடுவோம்- குஷ்பு ட்வீட்.
விடுதலை சிறுத்தைகள் எனது கைதால் மகிழ வேண்டாம். எங்களின் பலத்தை கண்டுதான் கைது செய்துள்ளனர். நாங்கள் எதற்காகவும் பின்வாங்கப் போவதில்லை- குஷ்பு ட்வீட்
* திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதால் பதற்றம்.
சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
* தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.
உயிர்காக்கும் எக்மோ கருவி சிகிச்சையிலும் பின்னடைவு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.
சிகிச்சையில் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்.
* போலீஸ் தடியடி:
கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், விசிக தர்ணா போராட்டம்.
விடுதி தடுப்பை விசிகவினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதற்றம்.
பாஜக - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு - போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.64 உயர்ந்து ரூ.4,787-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு.
நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.
* புதுச்சேரியில் 10சதவீத இடஒதுக்கீடு:
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு.
* புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் வெளிப்புற சிகிச்சை சேவைகள் தொடங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற வேண்டும்.
ஒரு நோயாளியுடன் ஒரு நபர் மட்டுமே மருத்துவமனைக்குள் செல்லலாம் என்று அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம்:
உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸூக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் மனுத்தாக்கல்.
நோட்டீஸ் மீதான தடையை நீக்க கோரும் மனு நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
* கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
செப்.30ஆம் தேதி மத்திய உள்துறை வெளியிட்ட கட்டுப்பாடுகள், நவம்பர் 30ம் தேதி வரை தொடரும்.
அடுத்த மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு.
* திருவிழா காலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது"
கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பு.
மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல்.
* லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு:
‘விழிப்பான இந்தியா - வளமான இந்தியா' காணொலியில் துவக்கி வைத்தார் பிரதமர்.
ஆண்டுதோறும் அக். 27 முதல் நவ. 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு.
மத்திய புலனாய்வுப் பிரிவு ஏற்பாட்டில் லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.
* லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு:
நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை.
ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது.
ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஊழல் அந்நிய செலாவணி முறைகேடு பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
ஊழலுக்கு எதிராக முறையான தணிக்கை பயிற்சி பரிசோதனை.
திறன் போன்றவற்றை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
* 10,12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு முடிவுகள் அக்.28ம் தேதியும், 11ம் வகுப்புக்கான துணைத் தேர்வு முடிவுகள் அக்.29ம் தேதியும் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
* இந்திய மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக மத்திய அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய அரசு எவ்விதத்திலும் துணை போகக்கூடாது - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு.
No comments:
Post a Comment