அக்னிப்புரட்சி இன்றைய (06.12.2020) முக்கிய செய்திகள்.
* கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக திருவள்ளூர் - கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.
* மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும். விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.
* சென்னை: சந்தனக்கடத்தல் வீரப்பனை வீழ்த்தியதால் அதிரடிப்படையாகச் சேர்ந்தவர்கள் பெற்ற இரட்டை பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் பணிகள் விதிகளில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
*நியூயார்க்: அமைதியான முறையில் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. அரசுகள் அதனை அனுமதிக்க வேண்டும். பிரிட்டன் எம்.பி.க்கள், கனடா பிரதமரை தொடர்ந்து இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கருத்துக்கள்
*டிசம்பர்-06: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.86.25-க்கும், டீசல் விலை ரூ.78.97-க்கும் விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.25 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.97-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
*கொரோனாவுக்கு உலக அளவில் 1,533,741 பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.33 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,533,741 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 66,832,925 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,227,853 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,022 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் 1,000 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் 1000 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றம் செய்யப்படுகிறது. 24 அடி கொள்ளளவு ஏரியின் நீர்மட்டம் 22.37 கனஅடியாக உள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 718 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
*போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் கவரப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து தச்சூர் கூட்டு சாலை நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கினர். அதில் 1 கிலோ கஞ்சா, 60 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை இருந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த மணிகண்டன்(21). பிரபாகரன்(19) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(27) மற்றும் ரஞ்சித்(19) ஆகியோரிடம் இருந்து கஞ்சா, போதைப் பொருட்களை விற்பனை செய்ய வந்ததாக கூறினர். போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
*கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற 5 கோடி போதை பொருள் பறிமுதல்
கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று காலை 4.10 மணிக்கு ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பொருட்களை தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது விமானத்தில் ஏற வந்த திருச்சி துவாக்குடியை சேர்ந்த ராஜரத்தினம் (44) என்பவர், கையில் இருந்த சிறிய சூட்கேசுடன் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது அவர், ‘‘என்னுடன் விமானத்தில் ஏற வந்தவர் இந்த சூட்கேசை கொடுத்தார். நீங்கள் முன்னால் செல்லுங்கள் ஒரு நிமிடத்தில் வந்து விடுவதாக கூறினார். அவர் வரவில்லை. அவர் கொடுத்த சூட்கேசில் எதோ இருக்கும் போல் இருக்கிறது. சந்தேகமாக இருக்கிறது,’’ என்றார். அதிகாரிகள் சூட்கேசை வாங்கி சோதனையிட்டனர். அதில் 1.2 கிலோ எடையில் பவுடர் இருந்தது. இதை பாலித்தீன் கவரில் ேபாட்டு சுற்றி சூட்கேசுக்குள் மறைத்து ஒட்டி வைத்திருந்தனர். இதை ஆய்வு செய்ததில் மருத்துவ அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் மயக்க மருந்தான மெத்தாம் பெடமைன் என்பது தெரிய வந்தது. இதை சிலர் உச்சபட்ச போதைக்காக பயன்படுத்துகிறன்றனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ₹5 கோடி இருக்கும்.
*காதலி குளிக்கும்போது வீடியோ எடுத்து 20 லட்சம் கேட்டு மிரட்டிய காதலன் கைது
பெரம்பூர்: வியாசர்பாடியை சேர்ந்தவர் சுஜாதா (30). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர், கடந்த 2012ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு 2013ம் ஆண்டு சுஜாதா மயிலாப்பூரில் வேலை செய்தபோது, அங்கு வேலை செய்த முருகேசன் என்பவர் சுஜாதாவுக்கு பலவகையில் தொல்லை கொடுத்துள்ளார். இந்த பிரச்னையில் ரமேஷ் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார். இதனால், ரமேசுக்கும், சுஜாதாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சுஜாதா குளிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க 20 லட்சம் ரூபாய் தரும்படி ரமேஷ் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சுஜாதா 3 லட்சம் ரூபாய், 12 சவரன் நகையை கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து பணம் கேட்டு ரமேஷ் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சுஜாதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், ரமேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
*சான் பிரான்ஸிஸ்கோ: வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடத்துகின்றனர். சான் பிரான்ஸிஸ்கோ - ஆக்லாந்து போ பாலத்தின் மீது கற்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்களின் மேல் கதவை திறந்து நின்று கொடிகள், பதாகைகளை காட்டி அமெரிக்கர்கள் போராட்டம் நடத்தினர்.
*சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு
சென்னை: சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புயல் பாதிப்பு குறித்து 2 குழுக்களாக பிரிந்து வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.
*சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு !
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். இதனையடுத்து, அவர் கூறியதாவது: நோய் தடுப்பு பணிக்காக 52 நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மழைபாதிப்பு பகுதிகளில் 30 கொரோனா மாதிரி சேகரிப்பு குழுக்கள் பணியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
*கொடிநாள் நிதியினை தாராளமாக வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சென்னை: கொடிநாள் நிதியினை தாராளமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். டிசம்பர் 7ம் தேதி நாளை படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கிறோம். முப்படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
* கன்னியாகுமரி : திருவள்ளுவர் சிலை , விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு மீண்டும் படகு சேவை தொடங்கியது
புயல் எச்சரிக்கை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு படகு சேவை மீண்டும் தொடங்கியது.
* ரஜினி கட்சியை நிர்வகிக்க மக்கள் மன்றத்தில் ஒருவர் கூடவா இல்லை ?
அழுத்தத்தின் காரணமாகதான் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியுள்ளார்
ஜனவரியில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வர் ஆகிவிட முடியுமா ?
60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி ? என்பது போல் உள்ளது ரஜினியின் அறிவிப்பு
எந்த மக்கள் பிரச்சனைக்கு ரஜினி குரல் கொடுத்துள்ளார் ? அவரது தேவை எங்கு உள்ளது ?
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
* மதுரையில் தடையை மீறி நேற்று வேல் யாத்திரை சென்ற பாஜக தலைவர் முருகன் , எச்.ராஜா உள்ளிட்ட 200 பேர் மீது மேலூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு
*பள்ளி கல்வித்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?"
கனிமொழிக்கு, செங்கோட்டையன் சவால்.
* திருவாரூர் மாவட்டத்தில் புயல் மழை காரணமாக 54,627 ஹெக்டேர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
* மழையால் மாவட்டத்தில் 1,111 வீடுகள் இடிந்துள்ளன, 30,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
*விழுப்புரம் மாவட்ட மார்க்கெட்டிங் கமிட்டியில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடாவில் சிக்கல்.
*சென்னை : சேலையூர் காவல் நிலையத்தில் நேற்று தீக்குளித்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி மரணம்
14 வயது மகளை காணவில்லை என சேலையூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்திருந்தார்
புகார் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் தந்தை சீனிவாசன் தீக்குளிப்பு.
*மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
மெயின் அருவி . ஐந்தருவி , புவியருவி , பழைய குற்றாலம் , சிற்றருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கொரானா ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
*வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து படையெடுத்து வரும் பறவைகள். முழு கொள்ளளவை எட்டிய ஏரி...
*நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறாரா..?
ரஜினி என்ன மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்திருக்கிறார், தீர்வு சொல்லியிருக்கிறார் ? ரஜினியின் தேவை தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை. - நாம் தமிழர் சீமான்
* வரும் 8 தேதி தேசிய அளவில் விவசாயிகள் அறிவித்துள்ள போராட்டத்தில் மதிமுக பங்கேற்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
*மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சிலிண்டர் வெடித்து 20 பேர் பலத்த காயம்
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இன்று காலை சிலிண்டர் வெடித்த விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
லால் பாக் கணேஷ் கல்லி எனுமிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 2ம் தளத்தில் இன்று காலை சுமார் 7 மணிக்கு சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் 20 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலின்பேரில் விரைந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
சிலிண்டர் வெடித்ததற்கு என்ன காரணமென உறுதியாக தெரியவில்லை.
முதலில் தீ பிடித்ததாகவும், அதையடுத்து சிலிண்டர் வெடித்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
*விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய மாணவர்கள்
டெல்லி, அரியானா எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு தேவையான போஸ்டர்கள் தயாரிப்பது மற்றும் உணவு பரிமாறும் பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லாத நிலையில், அவர்களுக்கு எங்களது ஆதரவை அளித்துள்ளோம் என மாணவர் ராகுல் ஜெய்னா தெரிவித்துள்ளார்.
*24 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி 24 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக - ஆந்திர எல்லையோரம் பெய்த கனமழையின் காரணமாக நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இன்று காலை ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் கற்பூரம் ஏற்றி தண்ணீரை வரவேற்றனர்.
உபரி நீர் செல்லும் கால்வாய் மாசடைந்து காணப்படுவதால் அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
*பள்ளிக்கரணையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
சென்னை பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர் 8 ஆம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ், நேற்று வீட்டில் ஸ்விட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
மயங்கி தரையில் விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.
ஆனால் வேரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*பொதுமக்களை ஈர்க்கும் வெளிச்சத் திருவிழா - கண்கவர் விளக்குகளை கண்டுகளிக்கும் குழந்தைகள்
பிரேசில் நாட்டில் கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இதில் முக்கியமாக, சாவோ பாவ்லோ நகரில் அமைக்கப்பட்டுள்ள வெளிச்சத் திருவிழா, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
காரில் அமர்ந்தபடி, பாதுகாப்பான முறையில் இதனை வேடிக்கை பார்க்க முடியும் என்பது தனிச்சிறப்பு.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதால், பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து வெளிச்சத் திருவிழாவின் கண்கவர் காட்சியை கண்டு களிக்கின்றனர்.
No comments:
Post a Comment