அக்னிப்புரட்சி இன்றைய (13.12.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.12.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.12.2020) முக்கிய செய்திகள்.

* வாக்காளா் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க இன்று இறுதி சிறப்பு முகாம்.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் இன்று இறுதி சிறப்பு முகாம்.

* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் சுவர் என்றார்கள் மன்னர்கள் - கமல்ஹாசன்

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  பிரதமருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி.

* 2001ல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கோழைத்தமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.

நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீர‌ர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது - பிரதமர் மோடி.

* சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார் - பிரேமலதா விஜயகாந்த்.

வரும் தேர்தல் தமிழகத்தின் முக்கிய தேர்தல், விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார் - பிரேமலதா.

* தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு: 499 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான 2-ம் நிலை காவலர் தேர்வு இன்று நடைபெற்றது.

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு தேர்வு நடைபெற்றது.

காலை 11 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.10 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் ஹால்டிக்கெட் மற்றும் எழுதுபொருட்கள் மட்டும எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

* சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம் - கமல்ஹாசன்.

நகர பகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு உட்பட்டு பிரசாரத்தை செய்வேன் - கமல்ஹாசன்.

* தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₨40 ஆயிரம் வழங்க வேண்டும் - தேமுதிக.

* விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை முதல் ரயில் மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டம்:

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்- பி.ஆர்.பாண்டியன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.

* காவல்துறை மூலம் கோழைத்தனமாக என் மீது வழக்கை தொடுத்துள்ளார் முதல்வர் -ஆ.ராசா.

ஜெயலலிதா மீதான உச்சநீதிமன்ற கண்டனங்களை நீதிமன்றம் மூலம் நிரூபிக்க எனக்கு வாய்ப்பு -ஆ.ராசா.

என் மீது வழக்கு தொடர்ந்துள்ள முதலமைச்சருக்கும், தமிழக காவல்துறைக்கும் நன்றி -ஆ.ராசா.

* கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க - ஸ்டாலின்.

கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மக்களுக்கு தேவை - ஸ்டாலின்.

* தமிழகத்தில் முதற்கட்டமாக நாளை 600 மினி கிளினிக்குகளை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.

* இந்து சமய அறநிலையத் துறையை கலைப்பது என்பது நடிகர் ரஜினியின் கொள்கைகளுள் ஒன்று என தினமலர் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

இந்து கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என இந்து இயக்கங்கள் தொடர் குரல் எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.

* திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான RTGS வசதி திங்கட்கிழமை முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

வங்கிக் கணக்குகளில் இருந்து மற்றொரு கணக்குக்குப் பெருந்தொகையை மின்னணு முறையில் உடனடியாகப் பரிமாற்றம் செய்வதற்கு RTGS என்னும் வசதி உள்ளது.

இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதியை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி திங்கட்கிழமை முதல் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் RTGS வசதி செயல்படும்.

* விவசாயிகள் போராட்டத்தை அடுத்து டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை இருபக்கமும் மூடப்பட்டுஉள்ளது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூர் சாலை முடக்கப்படும் என விவசாயிகள் எச்சரித்து இருந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது.

* எம்ஜிஆரின் தொடர்ச்சி நான்!
எம்ஜிஆரின் கனவை நான் நிறைவேற்றி காட்டுவேன்!

காந்தி மற்றும் பெரியார் ஆகியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை!

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனை மீண்டும் தனியாரிடமே கொடுக்கப்படும்...! -மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உரை!

* காட்டு யானை தாக்கி தந்தை, மகன் பலி

கூடலூர் அருகே கொளப்பள்ளி, 10 லைன்ஸ் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் யூனியன் கவுன்சிலர் ஆனந்த் ராஜா மற்றும் அவரது மகன் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages