அக்னிப்புரட்சி இன்றைய (17.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* JEE மெயின் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது:
அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற உள்ள JEE Main தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாகவும், வரும் ஜனவரி 16-ம் தேதி வரை https://jeemain.nta.nic.in/webinfo2021/Page/Page?PageId=1&LangId=P இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விடுத்துள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் JEE Main தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு முடிந்த 4 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ள அவர், NEET தேர்வைப் போலவே, JEE Main தேர்வும் இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து 3-ம் நாள்:
ஸ்ரீநம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்க தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்ட பட்ச்சி , இரத்தின பாதம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* ஜனவரி 3-ல் தொகுதி-1 (GROUP 1) தேர்வு:
2021-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் பட்டியல் வெளியீடு
* மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது
வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன்பாக புதிய வாக்காளர் விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு
💥💵 Bitcoin இன் மதிப்பு $20,000 ஐ கடந்தது! 💵
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக $3200 ஆக இருந்த Bitcoin இன் மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் $13,799 மதிப்பு கூடியுள்ளது. இதில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட $10,000 மதிப்பு அதிகரிப்பு.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.
* சேலம் : தலைவாசல் அருகே இலத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
" கனமழை காரணமாக புதுச்சேரி - காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு.
* சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.
ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு.
* சபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு - நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல் படுத்தப்படும் தேவசம்போர்டு அறிவிப்பு.
* பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக் கிறார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை: அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி - கமல்ஹாசன்.
* சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு:
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்த மாநிலம் தமிழகம்.
கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்?
தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
* நீலகிரியில் வாழ்கின்ற படுகர் இன மக்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் -கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
* கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடல்.
வெள்ளப்பெருக்கால் மணம்பூண்டி - திருக்கோவிலூர் ஆற்றுப்பாலத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு.
கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக மணலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடல்.
வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவு தபால்தலையை வெளியிட்டார் பிரதமர் மோடி.
55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
* தமிழகத்தில் அரசாணை, சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரிய வழக்கு -தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம்:
இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே.
போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
* காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை காலதாமதம் செய்யலாமா?
மற்ற துறையை சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர் - உயர்நீதிமன்ற மதுரைகிளை.
நாளை பிற்பகலுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் டிஜிபிக்கு உத்தரவு.
தவறினால் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் காணொலி வாயிலாக ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை.
* புதுச்சேரியில் 10% இடஒதுக்கீடா?
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 % இட ஒதுக்கீடா?
அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மாணவி வழக்கு.
மத்திய அரசு, புதுச்சேரி அரசுகள் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
22 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடிகிறது - மனுவில் தகவல்.
* போராட்டங்களுக்கு தீர்வு காணும்வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியுமா? -மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் பதில்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய மனுக்களை விடுமுறைகால அமர்வு விசாரிக்கும் - தலைமை நீதிபதி.
* சென்னையில் 210 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி -சென்னை மாநகராட்சி தகவல்.
டிச.16 வரை 6,344 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை.
210 பேருக்கு தொற்று உறுதி, 3,773 பேருக்கு நெகட்டிவ் முடிவுகள்.
2361 பேருக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை - சென்னை மாநகராட்சி.
* தமிழகத்தில் அடுத்து இரு நாட்களுக்கு 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.
குமரிக்கடலுக்கு அருகில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை நீடிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணம்பூண்டியில் 17 செ.மீட்டரும், திருக்கோவிலூரில் 16 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தமிழத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் இயல்பை விட 8 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதி வரை பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 50 ராக்கெட்:
42-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ். 01-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் இது சாத்தியமானது - சி.எம்.எஸ்.-01ஐ வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்.
சந்திரயான் -3, ஆதித்யா, ககன்யான் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்.
தனியாரும் விண்வெளியில் பங்கேற்கும் வகையில் இத்திட்டங்கள் சிறப்பு வாய்ந்தவை - இஸ்ரோ தலைவர் சிவன்.
* 7.5 % கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருக்கும் மாணவர்களுக்காக மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?" - உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்.
* ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது - மின்வாரியம் அறிவிப்பு.
3 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் ஊழியர்களை தேர்வு செய்து கொள்ள மின்வாரியம் அனுமதி.
* நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை - முதலமைச்சர்.
சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைக்கு விவசாயிகள் நிலம் கொடுக்க தயாராக இல்லை என்றும், அவ்வாறு கொடுத்தால் சாலை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், கொரனோ நோய் தடுப்புப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகள்,விவசாய சங்க பிரநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுனருடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார்.
* திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது உத்தரவு
- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* தாமிரபரணி ஆற்றில் கனிமங்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும்"-நீதிபதிகள்.
அணுசக்தி துறை நிபுணர்கள் தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு.
தாமிரபரணி ஆற்று மணலில் கனிமங்கள் உள்ளது- வழக்கறிஞர் ஆணையம் அறிக்கை தாக்கல்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு.
* கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்:
ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தல்.
* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை.
36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.
* லஞ்ச வழக்கில் சிறை: மனைவியை கொன்று இன்ஸ்பெக்டர் தற்கொலை.
மதுரை மாவட்டம் செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்பாண்டியன் . இவர் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். இவர் லஞ்சப்புகாரில் மதுரை சிறப்பு கோர்ட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இன்று ( 17 ம் தேதி )மனைவியை கத்தியால் குத்தி கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை தரகர்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட திமுகவினரிடையே மு.க. ஸ்டாலின் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசியதாவது:
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், எப்போதும் வெள்ளத்தால் சூழப்படும் கடலூர் மாவட்டத்துக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மழை வந்தாலே கடலூரில் வெள்ளம் வரும். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். தானே புயல் ஏற்பட்ட 2011 முதல் ஆட்சியில் இருக்கிறது அ.தி.மு.க., வெள்ளத் தடுப்புப் பணிக்காக என்ன செய்தது? ஏதாவது தொலை நோக்குப் பார்வையுடன் திட்டமிட்டீர்களா? மழை வெள்ளத்திற்கு ஆளாகும் கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு 2015-ஆம் ஆண்டு 140 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் தீட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏரி, குளங்கள் தூர்வாருதல், வடிகால் கால்வாய் கட்டுதல், ஆற்றுக் கரைகளைப் பலப்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால் அதனை முறையாகச் செய்யவில்லை என்பது, இப்போது பெய்த மழையில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அந்தப் பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இந்தளவுக்கு வெள்ளம் வந்திருக்காது! கடலூர் கெடிலம் ஆற்றின் கரைகளை திருவந்திபுரத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை பலப்படுத்துவதில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். சுமார் 22 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment