மழை நீரை சேகரிப்போம்.... நிலத்தடி நீரை பெருக்குவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா வேண்டுகோள். - Agnipuratchi

மழை நீரை சேகரிப்போம்.... நிலத்தடி நீரை பெருக்குவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா வேண்டுகோள்.

Share This

மழை நீரை சேகரிப்போம்....
நிலத்தடி நீரை பெருக்குவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா வேண்டுகோள்.

வாராது வந்த மாமணியாய் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில்  மழை நீர் பூமிக்குள் செல்ல வழியில்லை.  அதனால் பல இடங்களில் மரங்களுக்குக் கூட நிலத்தடி நீர் கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகின்றன.

நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் ஆயிரக்கணக்கான ஏரிகளையும், குளங்களையும் தூர் வாரினோம். அதன் தொடர்ச்சியாக மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு வழிகாட்டினோம்!

அதன்படி தான் அப்போதைய முதலமைச்சர் மழைநீர் சேமித்துத் திட்டத்தை அறிவித்தார். சில ஆண்டுகள் முறையாக செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டம்  அண்மைக்காலமாக சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது!

நம் வீட்டுக்கு தண்ணீர்  தேவை.  அதற்கான  நிலத்தடி நீர்மட்டத்தை  உயர்த்த வான்மழை நீரை பொதுமக்கள் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்; அதை கண்காணிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆகவே மழை நீரை சேமிப்போம்; நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவோம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages