அக்னிப்புரட்சி இன்றைய (19.12.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.12.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.12.2020) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 183 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின.
41 ஏரிகள் 50 சதவீதமும், 4 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.

* தமிழகத்தில் சமூகஇடைவெளியை பின்பற்றி திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி.

ஏற்கனவே அரங்குகளில் கூட்டங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திறந்தவெளியில் நடத்த இன்றுமுதல் அனுமதி.

* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் 5ம் நாள்:

ஸ்ரீ நம்பெருமாள், கவரிமான் தொப்பாரை கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், மார்பில் ரங்கவிமான பதக்கம், முத்துச்சரம், ரத்தின கலிங்கதோளா, பவள மாலை, காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

* அமெரிக்காவில் மாடர்னா கொரோனா வெருவித் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்த தடுப்பூசியை நெருக்கடி கால பயன்பாட்டிற்காக மக்களுக்கு செலுத்த ஒப்புதல் - அதிபர்  ட்ரம்ப்.

* 2018ல் தேர்ச்சிபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

* 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, Weightage முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீட்டின் முன்பு நீண்ட வரிசையில் மனு கொடுக்ப்பதற்கு 300க்கும் மேற்பட்டோர்  காத்திருப்பு…

* இந்தியா முழுவதும் கொரோனா வெருவித் தொற்றால் பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது

* அடிலெய்டு டெஸ்ட் போட்டி : இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் இலக்கு.

2-வது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது.

டெஸ்ட் போட்டிகளில், இதுவே இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

* டார்ச் லைட் சின்னம் வேண்டாம் - எம்ஜிஆர் மக்கள் கட்சி.

தேர்தல் ஆணையத்தில் டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என விண்ணப்பம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னம் கேட்டிருந்தது.

டார்ச் லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

* தமிழகத்தில் இன்னும் 4 மாதத்தில் திமுக ஆட்சி- மு.க. ஸ்டாலின்.

தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

* அடிலெய்டு டெஸ்ட் போட்டி : இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 52 ரன்களும், மேத்யூ வேட் 33 ரன்களும் எடுத்தனர்.

முதல் இன்னிங்சில் இந்தியா - 244, ஆஸ்திரேலியா - 191 ரன்கள் சேர்ப்பு.
2வது இன்னிங்சில் இந்தியா 36, ஆஸ்திரேலியா - 93 ரன்கள் சேர்ப்பு.

* தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.

இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.

ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும்.

எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் - முதல்வர்.

* தேர்தல் பணி அதிகாரிகளை சொந்த மாவட்டத்தில் பணியிலமர்த்தக் கூடாது - தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு.

சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட இருக்கும் அரசு அதிகாரிகளை, சொந்த மாவட்டத்தில் பணியமர்த்த கூடாது.

கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பிட்ட மாவட்டத்தில்  சம்பந்தப்பட்ட அதிகாரி 3 ஆண்டு பணியை பூர்த்தி செய்திருக்க கூடாது.

கடந்த காலத்தில் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கின நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளையும், அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நிலுவையில் இருக்கும் அதிகாரிகள் அல்லது தண்டனை பெற்ற அதிகாரிகளையும்,  மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளையும் தேர்தல் பணியில் நியமிக்க கூடாது.

6 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் அதிகாரிகளையும் தேர்தல் பணியில் அமர்த்த கூடாது.

2021 மே 24ம் தேதியோடு சட்டப்பேரவை காலம் நிறைவடைய இருப்பதை சுட்டிக்காட்டி,  தலைமை செயலர் , தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.

* தமிழகத்தை உருவாக்க வந்த ஆட்சி திமுக ஆட்சி, உருக்குலைக்க வந்த ஆட்சி அதிமுக ஆட்சி: ஸ்டாலின்

விவசாயிகளின் ஆட்சி என சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சட்டத்தை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே இருக்கிறார் முதலமைச்சர் எனவும் கூறினார். சுயநலனுக்காக பொங்கல் பரிசு அறிவித்தாரா முதல்வர் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தை உருவாக்க வந்த ஆட்சி திமுக ஆட்சி, உருக்குலைக்க வந்த ஆட்சி அதிமுக ஆட்சி என கூறினார். பெண்களுக்கு ஒதுக்கீடு, சாலை பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களை நியமிப்பது திமுக ஆட்சி தான் என கூறினார்.

இளைஞர்களை வேலைக்கு தகுதி உள்ளவர்களாக உருவாக்கியது திமுக ஆட்சி என பேசினார். இளைஞர்களுக்கு கணினியில் பயிற்சி அளித்ததும், பல்வேறு துறைகளில் கணினி மமயாக்கியதும் திமுக தான் என தெரிவித்தார். தனது நாற்காலி நிலைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் நலன்களை தாரைவார்த்தமு எடப்பாடி பழனிசாமி ஆட்சி என குற்றம் சாட்டினார். சுயநலத்துடன் நுழைந்து பதவியில் நீடிக்க துரோகம் செய்த எடப்பாடிக்கு திமுக வையோ, என்னையோ விமர்சிக்க தகுதியில்லை என கூறினார். வருவாய், மாசு கட்டுப்பாடு, ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages