அக்னிப்புரட்சி இன்றைய (29.12.2020) முக்கிய செய்திகள்.
* கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா, சடலமாக மீட்பு:
சிக்மகளூரு அருகே ரயில் பாதையில் தர்மே கவுடா சடலம் கிடந்தது.
சடலத்துடன் கடிதம் ஒன்றை மீட்டு போலீசார் விசாரணை.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் தர்மே கவுடா .
கடந்த 15ஆம் தேதி சபாநாயகர் இருக்கையில் தர்மே கவுடா அமர்ந்தபோது தள்ளுமுள்ளு.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் இருக்கையில் அமர மறுத்துவிட்டதால் தர்மே கவுடா அமர்ந்தார்.
தர்மே கவுடாவை வலுக்கட்டாயமாக
அப்புறப்படுத்தினர் காங்கிரஸ் உறுப்பினர்கள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் முதல்வர் நாளை திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம்.
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்த தீட்சிதர்கள் முடிவு:
இ-பாஸ் முறையை ரத்து செய்தால் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
பொதுமக்கள் நலன் கருதி தேரோட்டம் நடத்தப்படும் என தீட்சிதர்கள் தற்போது அறிவிப்பு.
தீட்சிதர்கள் அறிவிப்பை தொடர்ந்து தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி.
சிதம்பரத்தில் தேரோட்டம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு.
* மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட்.
சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது.
*;ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி:
மெல்பர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
70 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா அடைந்தது.
முதல் டெஸ்டில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி 2வது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.
ரஹானே தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
* பொங்கல் பரிசு திட்டத்தை தடுக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அப்போது அவர் பேசியதாவது : கொங்கு மண்டலத்தில் நாமக்கல் அதிமுகவின் எக்கு கோட்டையாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் துவக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தை பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார். பொங்கல் பரிசு திட்டத்தை தடுக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்களுக்கு நல்லது செய்வது ஸ்டாலினுக்கு பிடிக்காது.
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசுதான். ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே கட்சி அதிமுக. இவ்வாறு அவர் பேசினார்.
* பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.
ஆறு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - மத்திய அரசு.
* அதிமுக தொண்டர்களே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறந்து விட்டனர். அவர்கள் ஜெ-வை மறக்காமல் இருந்தால், அவரது மரணம் குறித்த உண்மையை கண்டறிய கோரிக்கை வைப்பர் - திருச்சி லால்குடி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்திலுள்ள உண்மை கண்டறியப்படும் - உதயநிதி ஸ்டாலின்.
* ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்.
அங்கீகரிக்கப்படாத நபர்கள், சில விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டு பணி வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர் - அண்ணா பல்கலைக்கழகம்.
ஏமாற்றி வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது- அண்ணா பல்கலைக்கழகம்.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 5-ம் நாள்:
ஸ்ரீ நம்பெருமாள் வைரமுடி கிரீடம், வைர அபயஹஸ்தம் மற்றும் திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை.
புதுக்கோட்டை அருகே ஜூலையில் நடந்த சம்பவம் தொடர்பாக ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம், குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு.
* தமிழகத்தில் இன்றைய கொராணோ வைரஸ் பாதிப்பு!
தமிழகம் - 957
சென்னை - 286
குணம் - 1065
மரணம் - 12
* இந்தியா - ஆஸி. இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியான நிலையில் ஆஸி. கிரிக்கெட் வாரியம் விளக்கம்.
* திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதத்தில் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தான இணையத்தில் காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்குகிறது.
நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யாத பக்தர்கள் திருமலைக்கு வரவேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
* இளையராஜா அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியது அநாகரீகம்.
பிரசாத் ஸ்டுடியோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்.
நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் இளையராஜாவை அவமதித்திருப்பது அநாகரித்தின் உச்சம்.
No comments:
Post a Comment