30/12/2020 இன்று வன்னியர்களுக் கான தனி இட ஒதுக்கீடு கூறி நம் நடத்திவரும் அறவழிப் போராட்டத்தின். நான்காம் கட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் இன்று வெற்றியுடன் நடைபெற்று முடிந்ததற்கு அன்புள்ள சொந்தங்களுக்கு! நன்றி. - பு.த. அருள்மொழி மாநில வன்னியர் சங்க தலைவர்
நான் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில்.
கலந்து கொண்டேன். ஓரளவு மக்கள் கூட்டம், பெண்கள் கூட்டம் இருந்தது. ஊர்வலமாக ஒன்றிய அலுவலகம் சென்று ஆணையர் அவர்களிடம் மனு கொடுத்தோம். அதன் பிறகு
கூடியிருந்த கூட்டத்தில் சில நிமிடங்கள் உரையாற்றினேன். 42 ஆண்டுகளாக வன்னியர் சங்கம் டாக்டர் அய்யாவின் தலைமையில் இதற்காக நடத்திவரும் போராட்டங்களை விவரித்தேன்.
டாக்டர் அன்புமணி தலைமையில் ஆட்சி அதிகாரத்தை பெற்றே தீரவேண்டும் என்று வலியுறுத்தினேன். இதைப்போலவே மற்ற ஒன்றியங்களிலும் அறவழி ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.
வருகிற 08/01/2021ல் நகராட்சி முன்பு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதை வன்னியர் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வருகிற ஜனவரி 1ஆம் தேதியன்று எனக்கு 69வது ஆண்டு பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நமது சொந்தங்கள் எனது இல்லத்திற்கு வருவார்கள். இந்த ஆண்டு அதைப் போல யாரும் வருகை தர வேண்டாம். என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
கொடிய கொரானவின் பரிணாமம்
புதிய உருவில் வேகத்தோடு பரவி வரும் இந்த நேரத்தில் பிறந்தநாள் என்று கூட்டம் சேர்ப்பது சரியில்லை என்பதால்.என் அன்பு சொந்தங்கள் அவரவர் இல்லத்தில் இருந்தபடியே என்னை வாழ்த்துங்கள். நீங்களும் உங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டு இல்லத்தில் இருங்கள்.
மக்கள் காவலர் டாக்டர் அய்யா அவர்கள் இந்த கொடிய கொரானா காலத்தில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார் அனைவரும் மதித்து நடக்கவேண்டும்.
ஒரு முதியவனாகிய நான் அன்பு சொந்தங்களான வன்னிய மக்களுக்கும், வன்னிய இளைஞர்களுக்கும்,
விடுகின்ற பிறந்தநாள் செய்தி. யாதெனில் வன்னிய மக்களின் வாழ்க்கையில் இனி ஏமாற்றமே இருக்கக்கூடாது. நிறைந்த வருமானமும் நிம்மதியும் பெற்று வன்னியர்கள் வாழவேண்டும்.
டாக்டர் அய்யாவின் வழிகாட்டுதலில். டாக்டர் அன்புமணி தலைமையில்.
ஆட்சி அதிகாரத்தை நாம் பெறவேண்டும்.
நன்றி! வணக்கம்..
No comments:
Post a Comment