பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31.12.2020 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழி சிறப்பு பொதுக்குழு கூட்டம் - Agnipuratchi

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31.12.2020 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

Share This

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31.12.2020 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

2020ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2021-ஆம் ஆண்டை வரவேற்போம்

31.12.2020 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறவுள்ள புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க , வ.ச, சமுச உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். 2020-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. மேற்கொள்ளவிருக்கும் நிலைப்பாடு குறித்து சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த இணைப்பை சொடுக்கி இணைய வழி கூட்டத்தில் பங்கேற்கலாம்:

Topic: PMK General Body Meet

1. Zoom இணைப்பு:

Join Zoom Meeting

www.pmkofficial.com/PMKMeet

(அல்லது)

2. Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்

Meeting ID: 856 8826 1747

Passcode: 12345

இவண்
ஜி.கே.மணி
தலைவர், பா.ம.க

குறிப்பு:- பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் காலை 10.30 மணிக்கு இணையத்தில் இணையவேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages