29-ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டம்: அனைத்துக் கட்சி வன்னிய சொந்தங்களும் திரண்டு வாருங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா வன்னிய சொந்தங்களும் வேண்டுகோள் - Agnipuratchi

29-ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டம்: அனைத்துக் கட்சி வன்னிய சொந்தங்களும் திரண்டு வாருங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா வன்னிய சொந்தங்களும் வேண்டுகோள்

Share This

29-ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டம்: அனைத்துக் கட்சி வன்னிய சொந்தங்களும் திரண்டு வாருங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா வன்னிய சொந்தங்களும் வேண்டுகோள்

தமிழகத்தின் மிகப்பெரிய சமூகம் வன்னியர் சாதி தான். ஆனால் அரசியல், சமூக, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு எல்லாவற்றிலும் வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறது. துறை செயலாளர், ஐஏஎஸ், ஐபிஎஸ், தேர்வாணையம், பல்கலைக்கழகம், நீதித்துறை போன்றவற்றிலும் கல்வி, அரசுப்பணியிலும் உரிய பங்கையோ, பிரதிநிதித்துவமோ கொடுக்கப்படாமல் வன்னியர் சாதி பலகாலமாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த சாதிக்கு தெரியாது. தேடலும் இல்லை. கவர்ச்சி, மாயை, போதை மயக்கம் போன்றவற்றால் சாதி புதையுண்டு போனது.

காரணம், தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல்கட்சி தலைவர்களும் சிறுபான்மை சமுதாயத்தினர். ஆயிரம் பேர் கொண்ட சாதியை சார்ந்தவரும் ஒரு கட்சிக்கு தலைவராகிவிடுகிறார். அந்த கட்சியில் தொண்டர்களாக வன்னியர்கள் தான் அதிகம் பேர் உள்ளனர். ஆய்வு செய்து பாருங்கள், அனைத்து கட்சி தலைவர்களும் சிறுபான்மை சாதியை சார்ந்தவர்களே. தாய்மொழி தமிழ் அல்லாத பிற மொழியினரே பெரும்பாலும் தலைவர்களாக உள்ளனர். வன்னியர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களுக்கும், அவர்களின் கட்சியினருக்கும் அடியாட்களாகவும், கொடிபிடித்து கோஷம் போடும் தொண்டர்களாகவும் வைத்துள்ளனர். எந்த கட்சி தலைவராவது வன்னியர் உரிமைக்கு குரல் கொடுத்துள்ளனரா? என்பதை எண்ணிப்பாருங்கள். இடஒதுக்கீடு கோரிக்கை சரி அல்லது தவறு என்று எதுவும் கூறாமல் கள்ள மௌனம் காக்கின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நானும் வன்னியர் சங்கத்தினரும் பல போராட்டங்கள், சிறைச்சாலைகள், துப்பாக்கிச்சூடுகள், உயிர்பலிகள் என்று தியாகம் செய்ததின் விளைவாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில உரிமைகளை பெற முடிந்தது. முழுமையாக உரிமை பெறமுடியாமைக்கு சாதி ஒற்றுமை இல்லாமையே காரணம்.

வன்னியர்கள் ஒட்டுமொத்த வளர்ச்சி பெற வேண்டுமானால், தனி இடஒதுக்கீடு தான் தேவை. இல்லையென்றால் உள்இடஒதுக்கீடாவது பெற்றாக வேண்டும். யாருடைய உரிமையையோ, பங்கையோ நாம் அபகரிக்க நினைக்கவில்லை. நாம் நமது உரிமையை, பங்கை கேட்கிறோம். அந்த கோரிக்கையை முன்னிருத்தி கடந்த ஒரு மாதமாக, பலகட்ட அமைதி வழி போராட்டங்களை பாமக, வன்னியர் சங்கம் இணைந்து நடத்தியது.

இந்த நிலையில் எனக்கு ஒரு ஆதங்கம், மனவருத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஒட்டுமொத்த சாதியின் உரிமைக்காக போராட்டம் நடக்கிறது. ஆனால் ஒருபகுதியினர் மட்டுமே போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள். திமுக, அண்ணாதிமுக மற்றும் பிற கட்சியில் உள்ள வன்னியர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். வேடிக்கை பேசி, வியாக்யானம், விமர்சனம் செய்து விளையாட்டாக உள்ளனர். அய்யகோ! இதை நான் என்னவென்று சொல்வது.

உள்ஒதுக்கீடு பெற்றால் அனைத்து வன்னியர்களுக்கும் பயனளிக்கும். சொல்லப்போனால் திமுக, அண்ணா திமுக கட்சியில் உள்ள வன்னியர் பிள்ளைகளே அதிகம் பயன் பெறுவர். போராடியவர்களைவிட வேடிக்கை பார்த்தவர்களின் பிள்ளைகளே ஏற்கனவே பெற்ற எம்பிசி பிரிவில் அதிக பலன்களை பெற்றனர் என்பது வரலாறு.

ஆகவே உழைப்பது ஒருவன், பிழைப்பது வேறொருவன் என்று இல்லாமல் எல்லா கட்சியிலும் உள்ள வன்னியர்கள் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டும். உயிர்பலி கொடுத்த வன்னியர்களின் பழிபாவத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். உயிர்பலி கொடுத்தது வன்னியர்கள் ஆனால் உண்டு பயனடைந்தது 108 சாதியினர். நன்றி சொல்ல கூட மறந்தனர். அதுபோன்ற பாவத்திற்கும், பழிக்கும் ஒதுங்கி நின்று நீங்களும் ஆளாகாதீர்.

வருகின்ற 29-01-2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடக்கும் போராட்டத்தில் பிறகட்சி வன்னியர்கள் பாமக வுடன் இணைந்து போராட வேண்டுமென்பதில்லை. என்னைகூட நீங்கள், உங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பாமக கட்சியினருடன் கூட சேர்ந்து போராட வேண்டியதில்லை. ஆனால் திமுக, அதிமுகவில் உள்ள வன்னியர்கள் அவரவர் கட்சி கொடிகளையும், கரை வேட்டிகளையும், சின்னங்களையும் பயன்படுத்தி தனித்தனி குழுக்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட முன்வரவேண்டும். அதேபோல் அனைத்து கட்சிகளிலும் உள்ள வன்னியர்கள் அவரவர் கட்சியையும், கட்சி தலைவரையும் இடஒதுக்கீடு உரிமைக்கு குரல் கொடுக்க வலியுறுத்தும்படி வேண்டுகிறேன். அவரவர் கட்சி தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்களும் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. அந்தந்த கட்சியிலுள்ள வன்னியசமூக தொண்டர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்ட சகோதர சாதிகளைச் சார்ந்த தொண்டர்களும் கலந்துகொண்டாலும் போதுமானது.

குழுக்கள் வெவ்வேறாக இருந்தாலும் உரிமைக்கான குரல் ஒன்றாக இருக்கவேண்டும். அவரவர் தனித்தனி கட்சி அடையாளங்களோடு போராடி இடஒதுக்கீட்டு உரிமையை பெற முயற்சிக்க வேண்டும். எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்காக இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள் என்பதே எனது விருப்பமும் வேண்டுதலுமாகும்.

‘நான் கோலூன்றி நடக்கும் நிலையிலும் இந்த ஊமை சனங்களுக்காக என் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.!’

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages