இடஒதுக்கீட்டு போராளி, தினப்புரட்சி நிர்வாகி மருத்துவர் இராமதாசு அய்யாவின் 40 ஆண்டு நண்பர் திரு டெல்டா அ.நாராயணசாமி (87) A.M .I.E மறைவுக்கு அக்னிப்புரட்சி இதழின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
வன்னியர் சங்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு ,மக்கள் காவலர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களோடு தன்னுடைய நெடிய பயணத்தை மேற்கொண்டவர், வன்னியர் சங்க மூத்த நிர்வாகி, இடஒதுக்கீட்டு போராளி, தினப்புரட்சி நிர்வாக இயக்குனர், வன்னியர் கல்வி மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அமைப்பாளர் மதிப்பிற்குரிய அய்யா திரு. டெல்டா அ.நாராயணசாமி (87) A.M .I.E அவர்கள் 25-05-2021 அன்று அதிகாலை 1-00 மணியளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அன்னார் அரியலூர் மாவட்டம் சோழன்குடிகாடு கிராமத்தை சார்ந்தவர். கல்வி பணியில் தன்னுடைய கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் நிலைப்பள்ளி அமைத்து கொடுத்தவர். எண்ணற்ற ஏழை மாணவர்களின் கல்விக்கு பணம் வழங்கிய வள்ளல் ஆவார். அவர் இழப்பு வன்னியர் சமூகத்திற்கு மிகவும் பேரிழப்பு. அவரது இறப்பால் வாடும் வன்னியர் சொந்தங்கள் மற்றும் குடும்பத்தார், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
இங்கனம்
த. நாராயணசாமி
ஆசிரியர் அக்னிப்புரட்சி இதழ்
மற்றும்
அக்னிப்புரட்சி குழுமாம்
No comments:
Post a Comment