அக்னிப்புரட்சி இன்றைய (22.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.06.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 98.65 ரூபாய்க்கும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.83 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

💥 Smart Phone இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்?

பட்டியல் அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணை.

பட்டியல் கிடைத்த உடன், அரசுப்பள்ளி மாணவர்களின் தேவைகளை நடுவண்,  மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நிறைவு செய்ய நடவடிக்கை.

💥 சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : மதுபோதையில் தகாராறில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்.

வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீசாருடன், மதுபோதையில் தகாராறில் ஈடுப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் ஒரு கார் தாறுமாறாக வந்துள்ளது.

போலீசார் காரை மறித்து சோதனை செய்த பொழுது போது காரில் வந்த நபர் அருகில் இருந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தினர்.

அவரிடம் விசாரித்த போது, தான் வழக்கறிஞர் என்று சொல்லி முகக்கவசம் அணியாமல் இருந்ததுடன், மது போதையில் காவலர்களிடம் தகராறில் ஈடுபாட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மது போதையில் தகராறு செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது.

* மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் -  கர்நாடகா இடையே பிரச்சினை நீடிக்கும் நிலையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு.

காணொளியில் இன்று நடக்கவிருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 25 - ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட மாநில அரசுகளை நடுவண் அரசு கேட்டுக் கொண்டதாக தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சுமத்தியுள்ளார்

* முக்கியமானது: சரிபார்ப்புக்காக எந்த ஒரு எண்ணையும் அழைக்க/KYC  அப்டேட் செய்ய/ஆதார் விவரங்களை புதுப்பிக்க சொல்லும் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்குமாறு கேட்கும் மோசடி செய்திகளை நம்பவேண்டாம்.  இதுபோன்ற செயல்களுக்கு எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்ய ஜியோ ஒருபோதும் கேட்பதில்லை. இதுபோன்ற SMS/அழைப்புகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள், இதனால் நிதி இழப்பு ஏற்படக்கூடும். பாதுகாப்பாக இருங்கள்.
- அணி ஜியோ

* தமிழ்நாட்டில் நகர்புற மற்றும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப். 15-ம் தேதிக்குள் நடத்த வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

* 16-வது தமிழக சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டம்;

காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியவுடன் சட்டப்பேரவை சபாநாயகர் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக், பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானமானது பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

* 3வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

கோவிட் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: அரசை குறை சொல்வதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை.

கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதற்காகவே, வெளியிடப்பட்டு உள்ளது.

3வது அலை வரும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.
மோசமான நிர்வாகத்தால்,முதல் மற்றும் இரண்டாவது அலையில் பேரழிவு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். இதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும்.

வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், 3வது அலையை தொடர்ந்து மேலும் பல அலைகள் வரும் என நான் கூறுகிறேன்.

இந்த நேரத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்துவதுடன், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

3வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும்.
இரண்டாவது அலையின்போது, பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியவில்லை. பிரதமரின் கண்ணீர்,, கோவிட்டால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது; அவர்களை காப்பாற்றாது.

ஆனால், பிரதமர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், மேற்கு வங்காளம் தேர்தலில் கவனம் செலுத்தினார்.

* எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் ரூ.48 லட்சம் கொள்ளை: சென்னை போலீஸ் கமிஷனர் தகவல்.

எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் ஈடுபட்டது வெளிமாநில கும்பல் எனவும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறி உள்ளார்.

இது தொடர்பாக எஸ்.பி.ஐ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். தமிழகம் முழுவதும் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், மற்ற மாநிலங்களிலும், இதேபோன்று ஏ.டி.எம்., கொள்ளை நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வேறு மாநிலத்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது

* வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டம், குடியுரிமை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படாது - அமைச்சர் தங்கம் தென்னரசு.

அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பம் ஜூன்.21ம் தேதியே நிராகரிப்பட்டது - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

* மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி, மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டமுன்வடிவை எதிர்க்க முன்வருமாறு 9 கடலோர மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு.

* சட்டப்பேரவையின் மாற்று தலைவர்களில் ஒருவராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் TRB இராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

💥பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை என்பதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து, பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை ஆணை

💥 பெண்களின் ஆடை குறைப்பே பாலியல் குற்றங்களுக்கு காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து

* +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

மாணவர்களின் உயிர் விலை மதிப்பற்றது; கொரோனா பரவல் சூழலில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது நிச்சயம் முடியாதது-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்.

சிபிஎஸ்இ  பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறையை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

சிபிஎஸ்இ  பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான அணைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்.

💥 இந்தியா நேற்று ஒரே நாளில் 88.09 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 135/5.

அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி அபாரம்.

* 2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை:

முதலமைச்சர் ஸ்டாலினின் தலையீட்டால் ஏற்கனவே 30 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் குறைந்து 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினின் தலையீட்டால் ஏற்கனவே 30 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் குறைந்து 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது சிமென்ட்!

* மீண்டும் பறக்கிறது ஜெட் ஏர்வேஸ்!
முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயக்கும் திட்டத்திற்கு NCLT எனப்படும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது.

லண்டனில் உள்ள கார்லாக் கேபிடல் (Kalrock Capital) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலதிபர் முராரி லால் ஜலான் ஆகியோர் கூட்டாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இயக்க முன்வந்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கிய NCLT, ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கான பயண ஸ்லாட்டுகளை 90 நாட்களுக்குள் ஒதுக்க டிஜிசிஏ-வுக்கு உத்தரவிட்டுள்ளது. கடன் சுமை காரணமாக 2019 ஏப்ரலில் ஜெட் ஏர்வேஸ் முடங்கியது.

அதன் பெரும்பாலான முக்கிய பயணத் தடங்கள் அனைத்தும் இதர விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. எனினும் இந்த ஆண்டு இறுதியில் 20 தடங்களில், 20 சிறிய மற்றும் 5 பெரிய விமானங்களுடன் அதன் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* நடிகர் விஜய் பிறந்தநாள் - ரசிகர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் என அவரது  வீட்டின் முன் ரசிகர்கள் காத்திருப்பு போராட்டம்

💥 COVAXIN தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனை தரவுகளின் படி, COVAXIN தடுப்பூசி 77.78% செயல்திறனை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

💥 கணிசமான மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் மட்டுமே இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படும் என நடுவண் அரசு அறிவிப்பு

" இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

* மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!
#மின்தடை #TNpowerCuts

சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?
- மருத்துவர் இராமதாஸ், பாமக நிறுவனர்

அணில்கள் மூலம் மின்தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்வெட்டு நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார். இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் வைரலாகி வருகின்றது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில ஊர்களில் அவ்வப்போது 5 நிமிடம், 10 நிமிடம் என்று மின்சார தடை ஏற்படுகிறது. சில மாவட்டங்களில் மின் தடை பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்னொரு சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படும் இந்த சிறிய அளவிலான மின்தடைக்கு என்ன காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்
அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், மின்வெட்டு பிரச்சனையை செய்து வருகிறோம். கடந்த டிசம்பருக்கு பின் முந்தைய அரசு பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. மரங்கள், செடிகளை அகற்றவில்லை. தேர்தலை மனதில் வைத்து பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. அதேபோல் அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

* கொரோனா கட்டுப்பாடு காரணமாக டிஜிட்டல் பொம்மை கருத்துக்கள் மட்டுமே இறுதிப் போட்டியில் இடம் பெறுகின்றன!

டிஜிட்டல் அல்லாத பொம்மை கருத்துக்களுக்கு தனியாக இறுதிப்போட்டி நடைபெறும்.

நாடு முழுவதிலிருந்து டாய்கத்தான் போட்டியில் பங்கேற்பதற்காக 1,20,000 பேர் விண்ணப்பிக்கப்பட்டு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்,

இதில் 1,567 கருத்துக்கள் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

* தஞ்சாவூர்
நாளை 23nd June 21 புதன்.
COVAXIN 2nd Dose முன்னுரிமை.
இந்திய குழந்தைகள் நல இல்லம் ICCW.near red cross.
மருத்துவக்கல்லூரி சாலை தஞ்சாவூர்.

உங்களது ஆதார் நகலை எடுத்துக் கொண்டு செல்லவும் முக கவசம் சமூக இடைவெளியை பின்பற்றவும்.

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

194 பேர் உயிரிழந்து உள்ளனர்; 13,156 பேர் குணமடைந்து உள்ளனர்.

* முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆன நியூசிலாந்து அணி:

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

சௌத்தாம்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது.

அதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களை எடுத்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages