குடிசை வீடுகளில் தங்கி, மக்கள் தரும் கூழ் குடித்து, குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றிய பா.ம.க. மக்கள் பிரதிநிதிகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு - Agnipuratchi

குடிசை வீடுகளில் தங்கி, மக்கள் தரும் கூழ் குடித்து, குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றிய பா.ம.க. மக்கள் பிரதிநிதிகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு

Share This

குடிசை வீடுகளில் தங்கி, மக்கள் தரும் கூழ் குடித்து, குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றிய பா.ம.க. மக்கள் பிரதிநிதிகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு

‘‘மக்களிடம் செல்லுங்கள்
அவர்களில் ஒருவராக வாழுங்கள்
அவர்களை நேசியுங்கள்
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்
அவர்களிடமிருந்து தொடங்குங்கள்
அவர்களுடன் சேர்ந்து உழையுங்கள்
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமையுங்கள்’’

என்ற சீன தத்துவ அறிஞர் லாவோ சீ-யின் தத்துவத்தில் எனக்கு எப்போதும் உடன்பாடு உண்டு. மக்களிடம் செல்லாமல், அவர்களுடன் இணைந்து வாழாமல் அவர்களின் தேவைகளை அறிய முடியாது; அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பது எனது உறுதியான நம்பிக்கை ஆகும்.

அதனடிப்படையில் தான்,‘‘பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மாதத்தில் ஒரு நாள், குறிப்பாக முழு நிலவு நாளில் தங்கள் தொகுதிக்குட்பட்ட ஏதேனும் ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களுடன் தங்கி, அவர்களில் ஒருவராக வாழ வேண்டும்; அவர்கள் தரும் உணவு கஞ்சியோ, கூழோ அதை குடிக்க வேண்டும்; அவர்களின் ஓலைக் குடிசைகளில் தங்குவதற்கு  இடமிருக்காது என்பதால் வீட்டுக்கு வெளியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதில் உறங்க வேண்டும். ஏழை மக்களுடன் தங்கியிருக்கும் காலத்தில் அவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனது அன்புக்கட்டளையை பின்பற்றி கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் மக்களாக வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவரான தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணையமைச்சரான அரங்க. வேலுவின் அனுபவங்களை மட்டும் உங்களுக்காக இந்த முகநூல் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்றைய வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும், இராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கும் உட்பட்ட தானியூர் கிராமத்தில் ஒரு முழு நிலவு நாளில் சென்று தங்கினார்.  அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தை அவர் ஆய்வு செய்தார். அந்தப் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. அது மாணவர்கள் படிப்பதற்கான எந்தத் தகுதியும் இல்லாததாக இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதையெல்லாம் அவர்  குறித்துக் கொண்டார்.

தொடர்ந்து அந்தக் கிராம மக்களைச் சந்தித்து அனைவரின் குறைகளையும் கேட்டறிந்தார். முதியோர்  ஓய்வூதியம், ஆதரவற்றோர் உதவித்தொகை தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்து பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்ற அரங்க.வேலு  அங்குள்ள ஒரு ஏழை வீட்டில் அன்புடன் வழங்கப்பட்ட கூழ், களி ஆகியவற்றை இரவு உணவாக உட்கொண்டார். பின்னர் அங்குள்ள ஓலைக்குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டு இரவு உறங்கினார். கொசுக்கடி கொடுமையானதாக இருந்தது. ஆனாலும், மக்கள் அனுபவிக்கும் அந்தக் கொடுமையை நானும் அனுபவிக்கிறேன் என்று பொறுத்துக் கொண்டார் அந்த மத்திய அமைச்சர்.

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்த அவர்,  பக்கத்து கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்தித்தார். பல வயல்களில் உழவர்களுக்காக ஏர் பிடித்து நிலங்களை உழுதுக் கொடுத்தார். தொடர்ந்து அங்குள்ள பம்ப் செட்டில் குளித்து விட்டு மீண்டும் மக்கள் சந்திப்பைத் தொடர்ந்தார். ஒரு சலவைத் தொழிலாளியை அவரது இடத்திற்கே சென்று சந்தித்து அவரது தொழில் குறித்தும், அவரது வருமானம் குறித்தும் விசாரித்த அரங்க. வேலு அவருக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் அவர் மேற்கொண்ட நடவடிக்கை தான் மிகவும் சிறப்பானது ஆகும். முதல் நாள் மக்கள் தெரிவித்த அனைத்து குறைகள் மற்றும் கோரிக்கைகளையும் பட்டியலிட்டுக் கொண்ட அமைச்சர், அவற்றுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகளையும் தானியூருக்கு வரவழைத்தார். மக்களின் அடிப்படைத் தேவைகள், உதவிகள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறிய அவர், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் செய்தார். அதனால் தானியூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்பின் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆதனூரை அடுத்த வெள்ளக்குளம் கிராமத்திற்கு சென்ற அரங்க. வேலு அங்கும் மக்களுடன் வாழ்ந்து அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டு அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தார். பா.ம.க.வின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இதே போல் தங்களின் தொகுதியில் மக்களுடன் வாழ்ந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினர். இவையெல்லாம் வேறு எந்தக் கட்சிகளாலும் செய்யப்படாத, செய்ய முடியாத சாதனைகள் ஆகும்!
                                *********

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages