அக்னிப்புரட்சி இன்றைய (16.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.07.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.23 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்பப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை.

* மேகேதாது அணை விவகாரம் தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றனர்.

மேகேதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க,பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து வலியுறுத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் அனைத்து கட்சிக் குழுவினர் டெல்லி சென்றனர்.

* கும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்து 17ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  தீ விபத்து நிகழ்ந்த பள்ளியிலிருந்து நினைவுச்சின்னம் வரை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

* தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆலோசனை.

சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

* கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.

இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு ஜூலை 17 முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். அவா்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்டிபிசிஆா் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும்.

* புதுச்சேரியில் வேகமாக குழந்தைகளை தாக்கும் கொரோனா:

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதி. அவர்களில் 9 குழந்தைகளுக்கு தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்.

புதுச்சேரியில் நேற்றுவரை ஒன்று வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட 16 குழந்தைகள் கொரோனா தொற்று காரணமாக கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு நடத்துவது தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடலாம் - பிரதமருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.

கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

* கொரோனா கோர முகத்தை உலகறியச் செய்தவர் மரணம்.

இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்.

புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் கந்தகாரில் நிலவி வரும் மோதலை படம்பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்டார்.

உயிரிழந்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் இந்திய கொரோனா பாதிப்புகளை பிடித்து காட்டிய சில படங்கள்….

* டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு:

சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக மத்திய அமைச்சருடன் பேசினோம். மேகதாது அணை - மத்திய அரசு துணைபோக கூடாது என வலியுறுத்தினோம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது.

தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத் உறுதி.

மேகதாது அணையை அனுமதிக்க கூடாது என மத்திய அமைச்சரிடம் தமிழக அனைத்துக்கட்சி
குழு வலியுறுத்தல்.

* ஜூலை 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.

* டி-20 உலககோப்பை கிரிக்கெட்; ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப்-2 ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

* ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் உயிரிழப்பு.

தொற்றுநோய்கள், மனிதாபிமான நெருக்கடிகளை படம் பிடித்த டேனிஷ் சித்திக் மறைவு வேதனையை தருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்.

* தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு:

புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை.

மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை.

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை.

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.

திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி.

பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரிய அனுமதி.

தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,312பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.

ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 46 பேர் உயிரிழப்பு; 2,986 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

* சொகுசு காருக்கு நுழைவு வரி - ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு.

தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரி மனு.

தீர்ப்பில் தன்னை பற்றிக் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் விஜய் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்.

நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages