அக்னிப்புரட்சி இன்றைய (15.02.2022) முக்கிய செய்திகள்.
* இன்று நடக்கும் 12 ஆம் வகுப்புக்கான வணிக கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்.
ஏற்கெனவே உயிரியல் தேர்வுக்கான வினாத்தாள் லீக்கானது.
வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித் துறை விசாரணை.
* திண்டுக்கல் : ஒட்டன்சத்திரத்தில் மருத்துவரின் வீட்டில் 280 சவரன் கொள்ளை.
மருத்துவர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 280 சவரன் நகை, ரூ 25 லட்சம் ரொக்கம் மற்றும் கார் கொள்ளை.
துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
* திமுகவில் இருந்து 51 பேர் தற்காலிக நீக்கம்:
திமுக, கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிடும் மேலும் 51 பேர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை.
நேற்று 56 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 51 பேர் நீக்கம்.
* திருச்சி : மணப்பாறை அருகே வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.
சமயபுரம் நோக்கி பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்ததில் 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்.
* திருப்பூரில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை, குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இளைஞர் சதீஷ் தலையை போலீசார் தேடிவந்த நிலையில் எம்.எஸ்.நகரில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
திருப்பூரில் செல்போன் வழிப்பறியின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் சதீஷை தலை துண்டித்து கொன்றுள்ளனர்.
இளைஞர் சதீஷ் கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* இந்தியாவில் 173.42 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
ஒரே நாளில் 44,68,365 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை
கொரோனாவில் இருந்து மேலும் 82,817 பேர் குணமடைந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 4,23,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 347 பேர் உயிரிழப்பு
மொத்த பலி எண்ணிக்கை 5,09,358 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை
* வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடுக்கு தொடர்பான மனுக்களை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம்.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு மேல்முறையீட்டு மனுக்களை மாற்றி விசாரிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு.
தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு அரசியல் சாசன அமர்வின் 9வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு உள்ளது.
குடியரசு தலைவரின் ஒப்புதல் உள் ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை 3 பிரிவாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. - தமிழ்நாடு அரசு.
* 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்: திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் சஸ்பெண்ட்.
தேர்வு முறைகேடுகளை தடுக்க தவறியதால் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைநடவடிக்கை.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் ரத்து செய்யப்படும் என்று சொன்னார். ஆனால், நடக்கவில்லை; திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது- ஓ.பன்னீர் செல்வம்
* வாக்குச்சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரி தொடரப்பட்ட வழக்கு.
ரூ 5,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கோவை மாநகராட்சி 95வது வார்டில் பிரசாரம் செய்ய அனுமதி மறுத்ததாக தொடரப்பட்ட வழக்கு.
பாஜக நிர்வாகி சையது இம்ராஹிமுக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
* மேலும் ஒரு கேள்வித்தாள் கசிந்தது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெற இருக்கும் இயற்பியல் தேர்வு கேள்வித்தாளும் கசிந்தது.
ஏற்கனவே இன்று நடைபெறும் உயிரியல், வணிக கணிதம் வினாத்தாள் கசிந்தது.
* தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ.
மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கியது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளியாக பள்ளி நிர்வாகி சகாயமேரி சேர்ப்பு.
* சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து கட்டுப்பாடு குறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை திரும்பப் பெற முடியாது. - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.
வாகன போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசு மனு.
* ஆக்கிரமிப்புகளை வரன்முறைபடுத்துவதை அனுமதிக்க முடியாது - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்:
மாற்று இடத்தில் மக்களை குடியமர்த்தும் பணியை ஏற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்வதாக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் - நீதிபதிகள்.
No comments:
Post a Comment