அக்னிப்புரட்சி இன்றைய (29.03.2022) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சம்
இன்று மட்டும் 17,106 மெகாவாட் மின்தேவையை மின்வாரியம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
* 4 நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்
தமிழகம் திரும்பிய முதல்வரை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்
4 நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்.
தமிழகம் திரும்பிய முதல்வரை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையான இந்த வெளிநாட்டு பயணம் வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இது ஒரு மகத்தான வெற்றி பயணம்.
ஐக்கிய அரசு அமீரகத்தில் ரூ.6,100 கோடிக்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
14,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. இந்த பயணம் ஒரு மகத்தான வெற்றி பயணமாக அமைந்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் இன்னும் சில ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன- சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சென்னையில் இன்று வழக்கம்போல பேருந்துகள் இயங்கும் - தொமுச அறிவிப்பு
* சென்னையில், இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94, டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்து ரூ.96.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது
* மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன
புதுச்சேரியில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம்.
தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை, அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்.
* கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த 21 வயது இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது- போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
* தமிழகத்தில் 7,381 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்.
நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.
குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும்; 200 கேள்விகள் கேட்கப்படும்- பாலச்சந்திரன்.
அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்; நவம்பரில் கவுன்சிலிங் நடைபெறும்.
தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
இந்தமுறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம்.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.
- தமிழக அரசு உத்தரவு
தமிழக அமைச்சரவை பதவியேற்ற முதல் 10 மாதத்தில் முதன் முறையாக இலாகா மாற்றம்
No comments:
Post a Comment