அக்னிப்புரட்சி இன்றைய (05.04.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 110.09 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ 100.18 ஆகவும் விற்பனையாகிறது.
* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைபெறும் திருக்கல்யாணத்தை தரிசிக்க பொதுமக்கள்
maduraimeenakshi.org/celestial/Tick…
என்ற இணைதளம் மூல் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
* சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்.
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில், அமைக்கப்பட்டுள்ள சமத்துவ புரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னையில் ஓபிஎஸ் தலைமையிலும், திருச்சியில் ஈபிஎஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
* திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பொலகுப்பதில் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் காலணி பூங்கா அமைய உள்ளது.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் தொடங்கியது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மல்லிகை பூக்களால் பந்தல் அமைக்கப்பட்டு கொடிமரத்தில் மிதுன லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டது.
* பெரும்பான்மையை இழந்தது இலங்கை அரசு.
நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவை 43 உறுப்பினர்கள் திரும்ப பெற்றதால் மகிந்தா ராஜபக்ச அரசு கவிழ்ந்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றன.
* பதவி ஏற்ற ஒரே நாளில் இலங்கை நிதி அமைச்சர் ராஜினாமா.
இலங்கையில் நிதியமைச்சராக நேற்று பதவியேற்ற அலி சப்ரி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
* நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை.
வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்தை வெளியிட தடை.
* தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில், சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும்.
மாநில கல்வி கொள்கை குழு, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.
* நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ற பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.
* டாஸ்மாக் பார் - தனிநீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தாரவுக்கு ஐகோர்ட் முதன்மை அமர்வு தடை விதிப்பு.
* லூலு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பது இங்கு உள்ள அனைத்து வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து விரைவில் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம் - வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா
* டிவிட்டரின் 9% பங்குகளை வாங்கிய அடுத்த நாளே ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் இணைந்தார் எலான் மஸ்க்
வரும் மாதங்களில் டிவிட்டரில் பல மாற்றங்களை கொண்டு வரப்போவதாக எலன் மஸ்க் அறிவிப்பு
* போலீஸ் டி.எஸ்.பி கைது:
கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது.
மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நிலத்தகராறு தொடர்பான வழக்கை முடித்துக் கொடுக்க லஞ்சம் வாங்கியவரை கைது செய்தது காவல்துறை.
* அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment