அக்னிப்புரட்சி இன்றைய (06.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.04.2022) முக்கிய செய்திகள்.

* இலங்கையில் அவசர நிலை ரத்து
இலங்கையில் ஏப்.1 முதல் நடைமுறையில் இருந்து வரும் அவசர நிலை பிரகடனம் வாபஸ்
அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு

* சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.110.85க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.100.94க்கு விற்பனை.

* தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடக்கம்.

துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும்.

முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இன்று முதல் மே 10ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

* தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணம் உயராது - போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

தொடரும் டீசல் விலையேற்றம் காரணமாக, மற்ற மாநிலங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்.

* சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கல் கிராமத்தில் ₹94 லட்சம் மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும் - காங்கிரஸ் உறுப்பினர் முனிரத்தினம் கேள்விக்கு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில்.

* சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகு ரக வாகனங்கள் இரவில் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி  அளித்துள்ளது.

கோவை- பெங்களூரு சாலையில் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை இலகுரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தகவல்.

இந்த ஆண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என கூறினார்.

கடந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
புதிய முதலீடுகள் திருச்சி,தேனி, திண்டுக்கல்,விழுப்புரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.68,350 கோடி முதலீடுகள் ஈர்க்கபட்டுள்ளன : முதல்வர் மு.க ஸ்டாலின்

சொத்து வரி உயர்வை திமுக அரசு மனமுவந்து செய்யவில்லை
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காதபோது, வரியை உயர்த்தவேண்டிய நிலை - முதல்வர் ஸ்டாலின்

ஏழை, எளிய அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு 83 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது

கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகை பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* சொத்து வரி உயர்வை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை திரும்பப் பெற அதிமுக மற்றும் திமுக தோழமை கட்சிகளின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்க மறுத்ததால் அதிமுக வெளிநடப்பு

* திருவள்ளூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் - தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

* சென்னையில் ஆட்டோ மோதி படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜை நேரில் சென்று நலம் விசாரித்தார் டிஜிபி சைலேந்திர பாபு.

* இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை.

மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை  - அமைச்சர் ஜெய்சங்கர்.

* இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை.

டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்தவர் திருவேற்காடு வழக்கறிஞர் கோபிநாத் தனது குடிசை வீட்டில் தற்கொலை

* 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும்;

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்,

இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்- தேர்வுத் துறை.

* கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறப்பட்டது.- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.

ஆனால், மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

மக்கள் அச்சப்பட தேவையில்லை; கொரோனா  அதிகம் இல்லாத மாவட்டங்களில் அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.

* தடுப்பணை கட்டுவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

5 ஆண்டு கால ஆட்சியில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும்.
அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.

நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்டமாக ₹250 கோடி மதிப்பீட்டில் 8 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் துரைமுருகன்

* மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்ப பெற வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

நுழைவு தேர்வு என்பது மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று முதல்வர் விமர்சனம்.

* இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.

புதிய வகை கொரோனா தொற்றான கொரோனா XE இந்தியாவில் முதல் முறையாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிப்பு.

* திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஜய் கைகுலுக்கி நலம் விசாரித்தார்

* நீட் தேர்வு : 20 நிமிடங்கள் அதிகரிப்பு
3 மணி நேரம் மட்டுமே  நடைபெற்று வந்த  நீட் தேர்வு , 2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம்.

200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages