அக்னிப்புரட்சி இன்றைய (08.04.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கு விற்பனை; டீசல் ரூ.100.94க்கு விற்பனை.
* விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறார்களுக்கு ஜாமின் வழங்கி இளைஞர்கள் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் உத்தரவு!
* தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் "நமக்கு நாமே" செயல்படுத்துவதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
தமிழக முதல்வரின் கிராமங்களில் 'இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டம்' துவக்கம்.
ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் ஆம்புலன்ஸ் சிகிச்சைத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வாரத்தின் 6 நாட்களில் பல்வேறு கிராமங்களில் பரிசோதனை முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டம்.
* சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு.
இச்சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள்மொழி, பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ. கே. மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இரா அருள், சிவகுமார், சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்பு.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார்.
மீண்டும் சட்ட மன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.
தேவையான தரவுகளை திரட்டி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம்.
வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது.
தமிழக அரசு நீதிமன்றத்தில் தரமான வழக்கறிஞர்களை வைத்துதான் வாதாடியது - அன்புமணி.
* குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 11வது முறையாக 4%ஆக தொடரும் - நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு.
பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும். விலைவாசி உயர்வு 5.7%ஆக இருக்கும் என கணிப்பு.
கச்சா எண்ணெய் விலை உயர்வு விலைவாசி மீது குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்.
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% இருந்து 7.8%ஆக இருக்கும் என கணிப்பு.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் சூழல் பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார்
* அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமல்ல.
ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல - தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
* அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ்- எடப்பாடி தொடர்ந்த வழக்கு.
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ்- எடப்பாடி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உரிமையியல் நீதிமன்றம்.
* சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி போராட்டம் நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* மக்கள் நலப்பணியாளர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்:
மக்கள் நல பணியாளர் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது.
கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக 1989-ல் 25,354 மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1991ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1997 பிப்ரவரியில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2001 ஜூன் மாதம் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையை விட்டு நீக்கியது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 2006 ஜூனில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை அளித்தார் கலைஞர்.
ஊராட்சிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 12,618 பேர் மக்கள் நலப்பணியாளர்களாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2011 நவம்பரில் மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா.
அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக அரசு திட்டம்
முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் விரும்பினால் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக சேரலாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
* முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவுக்கே முழு அதிகாரம்.
குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாநில தலைமை செயலாளரே பொறுப்பு- உச்சநீதிமன்றம்.
அணை பாதுகாப்பு சட்டம் 2021, முழுமையாக அமலுக்கு வந்தவுடன், அணை மேற்பார்வை குழு தனது அதிகாரத்தை சம்மந்தப்பட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.
* 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி.
ஏப்ரல் 10ம் தேதி முதல் அனைத்து தடுப்பூசி மையங்களிலும், 18 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு.
* இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல; இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் ஆதாரம் ஆகும்.
ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம்.
பன்முகத்தன்மையே இந்தியாவை ஒரே நாடாக வைத்திருக்கிறது; பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா
* ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்.
மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள், எடையாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும்.
* கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
வெங்கட் பிரஷாந்த், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
* பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி இருவர் பலி: ஒருவர் படுகாயம்.
பெரம்பலூர் அருகே ஆத்தூர் செல்லும் சாலையில், கோனேரிப்பாளையம் என்ற இடத்தில் மின்னல் தாக்கி செல்லத்துரை, ராமர் ஆகிய இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
வெங்கடேஷ் என்ற வாலிபர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.
இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என நினைக்கிறாரா?, ஒற்றை மொழி- ஒற்றுமைக்கு உதவாது, ஒற்றைத்தன்மை - ஒருமைப்பாட்டையும் உருவாக்காது.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள்.ஆனால், நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
No comments:
Post a Comment