திருவள்ளூர் தெற்கு, மத்திய மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை
பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வக்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆலப்பாக்கம் சேகர், மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் 7 ஒன்றியங்கள், 2 மாநகரப் பகுதிகள், ஒரு நகரம், ஒரு பேரூரைச் சேர்ந்த 22 நிர்வாகிகளும், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் அம்பத்தூர் கே.என்.சேகர், மாவட்டத் தலைவர் ஆவடி அனந்த கிருஷ்ணன் மற்றும் 8 மாநகரப் பகுதிகள் , 2 நகரங்களைச் சேர்ந்த 20 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment