அக்னிப்புரட்சி இன்றைய (09.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.04.2022) முக்கிய செய்திகள்.

* ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த விவகாரம்

ஆஸ்கார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு பத்து ஆண்டுகள் தடை விதிப்பு.

* சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 3வது நாளாக இன்றும் மாற்றமில்லை

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கு விற்பனை; டீசல் ரூ.100.94க்கு விற்பனை.

* சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் உருது பள்ளிகள், ரமலான் நோன்பு காரணமாக வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும்

காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 5 பாடவேளைகளுடன் உருது பள்ளிகள் செயல்பட சென்னை மாநகராட்சி உத்தரவு

* தென் தமிழக கடற்கரை, குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
- வானிலை ஆய்வு மையம்

* யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டிருந்தது

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது

* 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் - தேர்வுத்துறை புதிய உத்தரவு

10, 11 & 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு.

10ம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு.

11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக்கொள்ள அனுமதி.

மாற்றுத்திறன் தேர்வர்கள் தரை தளத்திலேயே தேர்வெழுத வசதி.

தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி.

* மாணவர்கள் படிப்பை முடித்த 6 மாதங்களில் பட்டம் வழங்கிட வேண்டும்;

பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் - பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு.

பட்டங்களை தாமதமாக வழங்குவது, மாணவர்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது - யுஜிசி.

படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்காத பல்கலை. மீது நடவடிக்கை - யுஜிசி.

* சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது

சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்

* சென்னை, நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

* இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவு.

இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கைகள், முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது-உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்.

இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் தேர்தல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரிய வழக்கு.

* இனி சிறப்பு தடுப்பூசி முகாம் கிடையாது - தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை.

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும்.

தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே தடுப்பூசி முகாமை நடத்த உத்தரவு.

* குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து, பச்சை பயறு ஆகியவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை.

உளுந்துக்கு ரூ.63, பச்சைபயறுக்கு ரூ.72.75 குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் - வேளாண் துறை.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இரட்டை B.Sc. படிப்பை வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) அறிமுகம் செய்கிறது சென்னைப் பல்கலைக்கழகம்.

* தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்த சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுன் விலையை ரூ.600லிருந்து ரூ.225ஆக குறைத்தது சீரம்.

கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225ஆக குறைத்தது பாரத் பயோடெக்.

* ஹேக் செய்யப்பட்டது இந்திய வானிலை மைய டுவிட்டர் கணக்கு.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு, மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages