தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை! - Agnipuratchi

தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை!

Share This

தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை!

தமிழ்நாட்டில் அனைத்து இளைஞர்களுக்கும் கல்வி, திறன்மேம்பாடு, பயிற்சி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; அதற்காக அவர்களை தயார்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கத்தின்  நிர்வாகிகளுடன் அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

தைலாபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் சிவப்பிரகாசம், தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் ஆறுமுகம், செயலாளர் பேராசிரியர் முனைவர் இராமசாமி, பொருளாளர் பேராசிரியர் முனைவர் ஆனந்தன், நிர்வாகிகள் பேராசிரியர்கள் ரவி, கண்ணன், சரவணன், செந்தில், குணசேகரன், சச்சிதானந்தன் உள்ளிட்ட 45 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages