இன்று தைலாபுரம் தோட்டத்தில் 46 மாவட்ட செயலாளர்களுடன்
மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு
பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு ரீதியிலான 46 மாவட்டச் செயலாளர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று கலந்தாய்வு செய்தார்கள். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 32 மாவட்டங்களின் பா.ம.க. தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment