அக்னிப்புரட்சி இன்றைய (05.11.2022) முக்கிய செய்திகள்.
* சரியாய் பேசுகிறோமா, என்பதை விட, சரியானவர்களிடம் பேசுகிறோமா, என்பது தான் முக்கியம்!
மௌனத்தை விட, சரியான தண்டனை இருக்க முடியாது, நம் எதிரிக்கும், நம்மை அலட்சியம் செய்யும், உறவுகளுக்கும்!!
நல்லவனாய் இரு, ஆனால் கவனமாக இரு, உலகின் அத்தனை ஏமாற்று பேர்வழிகளும், நல்லவர்களை தான், தங்களின் ஏமாற்று வேலைகளுக்கு, தேர்வு செய்கின்றனர்!!!
🙏இனிய இரவு வணக்கம்
* ட்விட்டருக்கு தினசரி 4 மில்லியன் டாலர் நஷ்டம்"
"ட்விட்டர் நிறுவனம், நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்திக்கிறது" ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க் விளக்கம்.
* இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிக்கு அகதிகளாக 10 பேர் வருகை.
இலங்கையில் இருந்து வந்த 10 அகதிகளை மீட்டு காவல் நிலையத்தில் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை.
* பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொல்லப்பட்ட வழக்கு.
கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு.
* நிபந்தனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ். முடிவு.
சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் பேரணியை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டம்.
*தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைப்பு.
தமிழகத்தின் 44 இடங்களில் நாளை அறிவித்து இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைப்பு.
தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிதள்ளிவைப்பு.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.38,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,770 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 அதிகரித்து ரூ.66.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சக மாணவர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம்:
முழுமையான விசாரணை இன்றி இருவர் மீதும் நடவடிக்கை எடுத்ததாக நீதிமன்றம் வேதனை.
குழந்தைகள் நலக்குழு மற்றும் காவல் துறையினர் மீது நீதிமன்றம் அதிருப்தி.
மாணவியை தந்தை இடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தனது மகளை மீட்டுத் தருமாறு மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் உத்தரவு
மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்த குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரின் செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி.
* தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்; அந்த வகையில் மாநிலத் தலைநகரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்"
- பரந்தூர் விமான நிலையம் அமைப்பதின் அவசியம் குறித்து தமிழ்நாடு அரசு செய்தி அறிக்கை.
பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும் தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தொழில் நுட்ப ரீதியில் விமான நிலையில் அமைய சாத்தியமான இடங்களில் ஒன்றாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எதிர்கால மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும் ரூ.100-க்கு, வருமானமாக ரூ.325 தமிழகத்திற்கு வருமானமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிப்பு
* பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது...!
சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டின் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாக யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது.
சீனா108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட ராக்கெட்டானது கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணில் செலுத்தியது. அதன்பின்னர் அது புவி வட்டபாதைக்குள் நுழைந்தது. ராக்கெட் அதன் பணிகளை முடித்து விட்டு ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. எனினும், இந்த ராக்கெட் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விவரங்களை சீனா உறுதி செய்யவில்லை.
பொதுவாக, இதுபோன்ற ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும். எனினும், கடந்த காலத்தில் சீன ராக்கெட் குப்பைகளில் சில முழுவதும் எரியாமல், அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த முறை மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்க கூடிய சாத்தியம் உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ராக்கெட்டானது, வளிமண்டலத்தில் நுழைந்து தெற்கு-மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் விழுந்துள்ளது என யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது.
ராக்கெட்டின் வடிவமைப்பின்படி, பூமியின் எந்த பகுதியில் விழவேண்டும் என்ற வழிகாட்டி அமைப்போ அல்லது மக்களிடம் இருந்து தொலைவில் விழுவதற்கான அமைப்போ அதில் இடம் பெறவில்லை.
சீன ராக்கெட் பூமியில் இதுபோன்று விழுவது நான்காவது முறையாகும். கடந்த 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் என மூன்று முறை சீனாவின் ராக்கெட்டுகள் இதுபோன்று பூமியில் விழுந்துள்ளன. ஒவ்வொரு முறையும், ராக்கெட் பாகங்களால் தரையில் உள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என சீனா தொடர்ந்து கூறி வந்தது. எனினும், நேற்றைய தினம் ஸ்பெயின் நாட்டின் விமான நிலையம் ஒன்று மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் நேற்று காலை காலதாமதமுடன் இயக்கப்பட்டன. இதேபோன்று மற்றொரு ராக்கெட்டை, வருகிற 2023-ம் ஆண்டில் சீனா மீண்டுமொரு முறை பயன்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் - தமிழக அரசு அரசாணை
ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம்; ரூ.10 கோடிக்கு மேலான பணிகளுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் - அரசாணை
* இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிக்கு அகதிகளாக 10 பேர் வருகை.
இலங்கையில் இருந்து வந்த 10 அகதிகளை மீட்டு காவல் நிலையத்தில் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை.
* அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படம் குறித்து தயாரிப்பு சங்கத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
நடிகர் விஜயகாந்தின் பேரரசு திரைப்பட கதையை தான் அட்லி ஹிந்தியில் படமாக எடுப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உண்மை நிலையை தெளிவுபடுத்த கோரி பேரரசு திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் புகார் மனு கொடுத்துள்ளார். நவம்பர் 9-ம் தேதி விளக்கம் அளிப்பதாக சென்னை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
* அண்ணா பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.
செமஸ்டர் தேர்வு முடிவுகளை
annauniv.edu ceo1.annauniv.edu
ஆகிய இணையதளங்களில் அறியலாம்.
* தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் தேர்வு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு.
அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் பிரபு.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் அசோக் சிகாமணி அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார்.
* நவ.15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்:
சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை எதிர்வரும் நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள்.
தஞ்சை, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு நவ. 15ஆம் தேதியும், குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு டிச.15ஆம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாளாக நிர்ணயம்.
* மழையால் விடுமுறை - சனிக்கிழமை வேலை நாள்.
மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.
* ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.
இலங்கை அணியின் வெற்றிக்காக காத்திருந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது; இங்கிலாந்து வென்று அரையிறுதியில் நுழைந்தது.
* 21 நாள் குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்...
ஜார்க்கண்ட் ராஞ்சி: ஜார்கண்டில் பிறந்து 21 நாளே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்த நிலையில், அவை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10ம் தேதி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அதை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் நீர்க்கட்டி போன்ற திசுக்கள் இருப்பதாக தெரிவித்தனர். அவற்றை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்படி பரிந்துரை செய்தனர்.
இதைத் தொடர்ந்து, 21 நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தை, ராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. கடந்த 1ம் தேதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், நீர்கட்டி போன்ற பகுதிக்குள் ஒன்றன் பின் ஒன்றாக 8 கருக்கள் இருந்தது. ஒவ்வொரு கருவும் 3 செமீ முதல் 5 செமீ வரை இருந்துள்ளது. அறுவை சிகிச்சையில் இவை அனைத்தும் அகற்றப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது.
மருத்துவர்கள் அதன் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இது குறித்து ராணி மருத்துவமனையின் தலைவர் ராஜேஷ் சிங் கூறுகையில், ‘மருத்துவத்தில் இதனை, ‘கருவிற்குள் கரு’ என்பார்கள். இது மிகவும் அரிதான ஒன்று. இதுவரை 8 கருக்கள் இருந்த சம்பவம் வேறு எங்கும் நிகழ்ந்தது இல்லை,’ என தெரிவித்தார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* மதுரை, மேலப்பட்டியில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு
ஆபாச நடனம் இருக்கக்கூடாது. நாகரிகமான உடைகள் அணியவேண்டும். இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி
* டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டம்
மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க வேண்டும் என அரசு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட பொதுநல வழக்கில், டாஸ்மாக் பதில்.
* ஹிமாச்சல் பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச மின்சாரம்: காங்., வாக்குறுதி.
ஹிமாச்சல பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதில் முக்கிய அம்சங்கள்
*பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
*5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
*பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை
*300 யூனிட்கள் இலவச மின்சாரம்
*இளைஞர்கள் புதிய தொழில்கள் துவங்க ரூ.680 கோடி ஸ்டார்ட் அப் நிதி
*ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 4 ஆங்கில வழிக்கல்வி துவங்கப்படும்
*நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக ஒவ்வொரு கிராமத்தினருக்கும் இலவச மருத்துவம்
*மாட்டு சாணம் கிலோ ரூ.2 க்கு கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* வாக்களிக்க செல்லும் போது, பாஜக வேட்பாளரை நினைவில் வைக்க வேண்டாம். தாமரை சின்னத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
எங்கெல்லாம் தாமரை சின்னத்தை பார்க்குறீர்களோ அப்போதெல்லாம் பாஜக & மோடி உங்களிடம் நேரடியாக வந்துள்ளனர் என்றுதான் அர்த்தம்”
- பிரதமர் மோடி
* மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 55 குழந்தைகள் பலி: அதிகாரப்பூர்வ தகவல்
மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 135 பேரில் 55 பேர் குழந்தைகள் என்றும், அவர்களில் 100 பேர் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்கள் குறித்து மாவட்ட நிர்வாக இறுதிப் பட்டியலின்படி, ஞாயிற்றுக்கிழமை பாலம் இடிந்து விழுந்ததில் 39 சிறுவர்கள் மற்றும் 16 சிறுமிகள் பலியானதாகஅதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 66 பேர் அல்லது பலியானபாதி பேர் மோர்பி நகரத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 44 பேர் மோர்பி கிராமப்புற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு, மோர்பி மாவட்டத்தில் மட்டும் 100 பேர் பலியாகினர். 13 பேர் ராஜ்கோட் மாவட்டத்தையும், 10 பேர் ஜாம்நகரையும், 4 பேர் கட்ச்சையும், 2 பேர் சுரேந்திரநகர், 2 பேர் தேவபூமி துவாரகா, 2 பேர் அகமதாபாத் மற்றும்ஒருவர் ஜுனாகத் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், இவ்விபத்தில் பலியான 16 வயது சிறுவன் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.
இவ்விபத்தில் 45 ஆண்களும், 35 பெண்களும் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்தெரிவிக்கின்றன.
* எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை"
"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்தான கோப்புகள் மத்திய அரசிடம் உள்ளது. பிரதமர் & உள்துறை அமைச்சர் இதுகுறித்து முடிவு செய்வார்கள்” -மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
* புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். புகார் கொடுத்த காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவு அளித்துள்ளனர். பொது நலன் கருதி அரசி அதிகாரிகள் தங்களது கடமையாய் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி எஸ்.சுப்பரமணியம் கூறியுள்ளார்.
* இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனை
கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
சார்பதிவாளர், ஊழியர்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்களின் 2 படகுகளை பறிமுதல் செய்து, 15 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
* யுஜிசி - நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
தேர்வு முடிவுகளை ugcnet.nta.nic.in; ntaresults.nic.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment